பெரும் அதிர்ச்சியடைந்தேன்.. அனில் மாதவ் தவே குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: மத்திய அமைச்சர் அனில் மாதவ் தவே காலமானதையொட்டி அவரது குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். நேற்று மாலை வரை அவருடன் பேசிக்கொண்டிருந்ததாகவும் அவரது திடீர் மரணம் பெரும் அதிர்ச்சியை அளிப்பதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சராக இருந்தவர் அனில் மாதவ் தவே. மத்தியப்பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வானவர் ஆவார்.

Union minister Anil madhav dave passed away: PM Modi condolence

உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அனில் மாதவ் தவே டெல்லியில் இன்று காலை திடீரென மரணமடைந்தார். அவருக்கு வயது 60.

அனில் மாதவ் தவே காலமானதையொட்டி பிரதமர் மோடி அவரது குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளா. இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் நேற்று மாலை வரை அனில் மாதவ் தவேவுடன் பேசிக்கொண்டிருந்ததாக கூறியுள்ளார்.

தனது நண்பரும் உடன் பணிபுரிபவருமான அனில் மாதவ் தவேவின் திடீர் மரணம் பெரும் அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளார். சுற்றுச்சூழலை கவனிப்பதில் தனிக்கவனம் செலுத்தி வந்தவர் என்றும் பிரதமர் மோடி தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Union minister Anil madhav dave passed away. PM Modi says he is "shocked" by the sudden demise of friend and respected colleague.
Please Wait while comments are loading...