For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

புதிய மத்திய அமைச்சர்களில் அனுப்பிரியா மட்டும்தான் "யங்".. முழு பயோ-டேட்டா!

By Veera Kumar
Google Oneindia Tamil News

டெல்லி: மோடி அமைச்சரவையில் இன்று புதிதாக 19 அமைச்சர்கள் பொறுப்பேற்றுள்ளனவர். அவர்களின் அரசியல் வாழ்க்கை குறிப்பு சுறுக்கமாக இதோ:

சுபாஷ் பம்ரே: மகாராஷ்டிரா மாநிலம் துலே தொகுதியை சேர்ந்த லோக்சபா உறுப்பினரான இவர், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை நிலைக்குழு உறுப்பினராகும். மருத்துவரான சுபாஷ் பம்ரே,
புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணராகும். இவரின் வயது 62.

பி.பி.சவுத்திரி: ராஜஸ்தான் மாநிலம் பளி தொகுதியின் பாஜக லோக்சபா உறுப்பினரான இவர், லாபம்தரும் பணிகள் தொடர்பான, கூட்டு நாடாமன்ற கமிட்டியில் தலைவராக உள்ளார். சுமார் 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் சவுத்திரி. இவருக்கு வயது 62.

சி.ஆர்.சவுத்திரி: 68 வயதாகும், சி.ஆர்.சவுத்திரி, ராஜஸ்தான் மாநிலம் நாகவுர் தொகுதியில் இருந்து பாஜக சார்பில் சுமார் 75 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர்.

Union ministers bio datas

அனுப்பிரியா பட்டேல்: உத்தரபிரதேசத்தில் பாஜகவின் கூட்டணி கட்சியான அப்னாதள் கட்சியின் தலைவரான அனுப்பிரியா பட்டேல், அக்கட்சியை தோற்றுவித்தவரான சோனேலால் பட்டேலின் மகளுமாவார். 35 வயதே நிரம்பிய அனுப்பிரியா பட்டேல், குர்மி ஜாதியின் முக்கியமான தலைவர்களில் ஒருவர்.

மன்சுக் எல்.மண்டாவியா: குஜராத்திலிருந்து ராஜ்யசபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர். இயற்கை வழியில் வாழ வேண்டும் என்று வலியுத்துபவர். நாடாளுமன்றத்திற்கு காரை தவிர்த்து சைக்கிளில் வரும் மன்சுக்கின் வயது 44 மட்டுமே.

கிருஷ்ண ராஜ்: உத்தரபிரதேச மாநிலம் ஜாஜகான்பூர் தொகுதியிலிருந்து பாஜக சார்பில் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற 49 வயதாகும் பெண் உறுப்பினர் இவர். உ.பி சட்டசபைக்கு 1996 மற்றும் 2007ல் தேர்வாகி சேவையாற்றிய அனுபவம் உள்ளவர் இவர்.

அஜய் தம்தா: உத்தரகாண்ட் மாநிலம் அல்மோரா தொகுதி உறுப்பினரான இவர், காங்கிரஸ் முக்கிய தலைவர் பிரதீப் தம்ராவை லோக்சபா தேர்தலில் தோற்கடித்து எம்.பியானவர். உத்தரகாண்ட் மாநில எம்.எல்.ஏவாக 2012ல் தேர்வானவர் இவர். வயது 43.

மகேந்திரநாத் பாண்டே: உத்தரபிரதேச மாநிலம் சண்டோலி தொகுதி எம்.பியான இவர் ஊரக மேம்பாட்டு நிலைக்குழு உறுப்பினராக உள்ளார். பிராமண சமூகத்தை சேர்ந்த இவர், உத்தர பிரதேசத்தில் அந்த ஜாதி வாக்குகளை ஈர்க்க பாஜகவுக்கு உதவுவார் என கட்சி எதிர்பார்க்கிறது. வயது 58.

ஜஸ்வந்த்சிங் பபோர்: குஜராத்தின் தகோட் தொகுதி எம்.பியான இவர், காங்கிரஸ் வேட்பாளர் பிரபா கிஷோரை 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தவர். வயது 49.

அர்ஜுன் ராம் மேக்வால்: ராஜஸ்தான் மாநிலம் பிகானிர் தொகுதியை சேர்ந்த இவர், பாஜகவின் தலைமை கொறடாவாக உள்ளார். 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர். நாடாளுமன்றத்திற்கு காரை தவிர்த்து சைக்கிளில் வருபவர். வயது 62.

எம்.ஜே.அக்பர்: மத்திய பிரதேசத்தில் இருந்து ராஜ்யசபா உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். மூத்த பத்திரிகையாளர் மட்டுமின்றி, பாஜகவின் செய்தித்தொடர்பாளரும் ஆவார். 1989ல் காங்கிரஸ் சார்பில் கிஷன்கஞ்ச் தொகுதியில் இருந்து எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். ஜார்கண்ட் மாநிலத்தில் இருந்தும் ராஜ்யசபா எம்.பியாக பணியாற்றிய அனுபவம் உள்ளவர். வயது 65.

பர்ஷோத்தம் ருபலா: பாஜகவின் துணை தலைவர்களில் ஒருவர். குஜராத்திலிருந்து ராஜ்யசபா எம்.பியாகியுள்ளவர். குஜராத் மாநிலத்தில், கேசுபாய் பட்டேல் மற்றும் நரேந்திர மோடி ஆகியோரின் அமைச்சரவையில் அமைச்சராக பணியாற்றியவர். வயது 61.

அனில் மாதவ் தாவே: மத்திய பிரதேசத்தை சேர்ந்த பாஜக ராஜ்யசபா எம்.பியான 59 வயதாகும் தாவே, சுற்றுச்சூழல்வாதி. நர்மதா நதியை சுத்தப்படுத்தும் இயக்கத்தின் முக்கிய போராளி இவர். ஆர்எஸ்எஸ் அபிமானியான இவர், 2009ல் முதல் முறையாக ராஜ்யசபா எம்.பியானார்.

ராஜேன் கோஹைன்: பாஜகவின் அசாம் நோகோங் தொகுதி எம்.பியான இவர், 1999லும் இதே தொகுதியில் இருந்து எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டவராகும். சர்பானந்தா சோனோவால் அசாம் முதல்வராகிவிட்டதால் அவருக்கு பதிலாக 65 வயதாகும் ராஜேன் கோஹைன் அமைச்சராக்கப்பட்டுள்ளார்.

ராம்தாஸ் அதவாலே: மகாராஷ்டிரா ராஜ்யசபா எம்பியான இவர், தலித் தலைவர்களில் ஒருவர் பாஜக கூட்டணி கட்சியான குடியரசு கட்சியை சேர்ந்தவர். 1998ல் மும்பை வடக்கு மத்திய தொகுதி எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். 1999 மற்றும் 2004ம் ஆண்டுகளிலும், காங்கிரசோடு கூட்டணி அமைத்து எம்.பியானவர். வயது 56.

விஜய் கோயல்: ராஜஸ்தான் மாநில ராஜ்யசபா எம்.பியான விஜய் கோயல், வாஜ்பாய் அமைச்சரவையில் இணை அமைச்சராக பதவி வகித்தவர். 11, 12 மற்றும் 13வது லோக்சபாக்களில் உறுப்பினராக பணியாற்றியவர். டெல்லி பாஜக தலைவர் இவர். வயது 62.

ரமேஷ் சந்திரப்பா ஜிகஜனகி: கர்நாடக மாநிலம் பிஜாப்பூர் தொகுதி லோக்சபா உறுப்பினரான 64 வயதாகும், ஜிகஜினகி, 1998 முதல் லோக்சபா உறுப்பினராக உள்ளார். ஜனதாதளம், லோக் சக்தி மற்றும் ஐக்கிய ஜனதாதள கட்சிகளில் பணியாற்றிய இவர் பாஜகவில் பின்னர் இணைந்தவர்.

எஸ்.எஸ்.அலுவாலியா: 65 வயதாகும் அலுவாலியா மே.வங்கத்தின் டார்ஜிலிங் தொகுதி லோக்சபா உறுப்பினர். நரசிம்மராவ் அமைச்சரவையில் பணியாற்றியவர். ராஜ்யசபாவின் எதிர்க்கட்சி துணை தலைவராக 2010 முதல் இரண்டாடு காலம் பணியாற்றியவர்.

பஹான் சிங் குலாஸ்தே: மத்திய பிரதேச மாநிலம் மண்டலா தொகுதி லோக்சபா உறுப்பினரான 57 வயதாகும் பஹன்சிங் குலஸ்தே, 1996-2009வரை லோக்சபா உறுப்பினராக பதவி வகித்தவர். வாஜ்பாய் ஆட்சிகாலத்தில் இணை அமைச்சராக பணியாற்றியவர்.

பிரகாஷ் ஜவடேக்கர்: மத்திய சுற்றுச்சூழல் துறை இணை அமைச்சராக பதவி வகித்த ஜவடேக்கர் தற்போது கேபினர் அமைச்சராக பதவி உயர்வு பெற்றுள்ளார். மத்திய பிரதேசத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ராஜ்யசபா உறுப்பினராக உள்ளார்.

English summary
Prime Minister Narendra Modi's council of ministers got 19 new faces on Tuesday morning. Here is the bio datas of all the ministers.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X