For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சர்ச்சை அமைச்சர் மகேஷ் ஷர்மாவிற்கு முன்னாள் ஜனாதிபதி கலாம் வசித்த வீட்டில் வசிக்க தகுதியிருக்கிறதா?

By Mayura Akilan
Google Oneindia Tamil News

டெல்லி: குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம் தங்கியிருந்த அரசு இல்லம், மத்திய சுற்றுலாத் துறை அமைச்சர் மகேஷ் ஷர்மாவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது அப்துல் கலாமை அவமானப்படுத்தும் செயல் என்று ஆம் ஆத்மி கட்சியினர் கருத்து கூறியுள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமுக்கு டெல்லி ராஜாஜி மார்க்கில் உள்ள அரசு இல்லம் ஒதுக்கப்பட்டது. அதில் நீண்ட காலமாக தங்கியிருந்தார் அப்துல் கலாம். அவரது மறைவுக்குப் பிறகு அந்த இல்லத்தை நினைவிடமாக மாற்ற வேண்டும் என பலதரப்பில் இருந்து கோரிக்கைகள் எழுந்தன.

ஆனால் சமீபத்தில் அந்த வீட்டில் இருந்த புத்தகங்கள், அவரது இசைக் கருவியான வீணை உள்ளிட்ட அனைத்து பொருள்களும் அவரது சொந்த ஊரான ராமேஸ்வரத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில், கலாம் தங்கியிருந்த அரசு இல்லத்தை நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகம், தற்போது மகேஷ் ஷர்மாக்கு ஒதுக்கீடு செய்துள்ளது.

இது டெல்லி அரசியல் வட்டாரங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியை ஆளும் ஆம் ஆத்மி கட்சியோ, இது அப்துல் கலாமை அவமானப்படுத்தும் செயல் என்றும் கூறியுள்ளது.

மத்திய அமைச்சர் மகேஷ் ஷர்மா கூறியுள்ள சர்ச்சைக்குறிய கருத்துக்களை என்னென்ன தெரிந்து கொள்ளுங்களேன்.

சாலைகளுக்கு பெயர் மாற்றம்

சாலைகளுக்கு பெயர் மாற்றம்

ஔரங்கசீப் ஒரு பெரிய மாமனிதர் இல்லை. அதனால், அவருடைய பெயரில் உள்ள சாலையின் பெயரை முஸ்லிமாக இருந்து தேசியவாதியாக மாறிய மாமனிதர் அப்துல் கலாமுடைய பெயரில் மாற்றலாம் என்று மகேஷ் ஷர்மா சொன்னது சர்ச்சையை ஏற்படுத்தியது.

கலாச்சார அழிப்பு

கலாச்சார அழிப்பு

நம்முடைய கலாச்சாரம் மாசுபட்டுள்ளது. மேற்கத்திய கலாச்சாரம் பரவி வரும் பகுதிகளை மொத்தமாக அழிக்க வேண்டும். அங்கே நம்முடைய கலாச்சாரத்தையும் நாகரிகத்தையும் நிறுவ வேண்டும்.

மேற்கத்திய கலாச்சாரம்

மேற்கத்திய கலாச்சாரம்

மேற்கத்திய கலாச்சாரம் தவறானது அல்ல. ஆனால், அது நம்முடைய கலாச்சாரத்துக்கு ஏற்றது அல்ல. நம் நாட்டில் 15 வயது குழந்தை பெற்றோர்களை விட்டுப் போகமாட்டார்கள்.

மதச்சார்பின்மை

மதச்சார்பின்மை

நான் குர்-ஆன் மற்றும் பைபிள் நூல்களை மதிக்கிறேன். ஆனால், அது இந்தியாவின் ஆன்மாவுடன் ஒத்துப்போவதில்லை. ராமாயணமும், மகாபாரதமும்தான் ஒத்துப்போகின்றன.

காவிமயமாக்கல்

காவிமயமாக்கல்

காவிமயமாக்கல் செய்ய வேண்டும் என்றால் 125 கோடி இந்திய மக்களுக்கும் கொண்டு செல்ல வேண்டும். அவர்களுக்கு ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க. பற்றி தெரிந்திருக்க வேண்டும்.

தாத்ரி படுகொலை

தாத்ரி படுகொலை

இது முன்பே திட்டமிடப்பட்ட படுகொலை என்று சொன்னால் நான் ஏற்கமாட்டேன். இது ஒரு விபத்து. அந்த வீட்டில் 17 வயது பெண் கூட இருந்தது. அந்த பெண் மீது யாருடைய விரல் கூட படவில்லை.

சாகித்ய அகாடெமி விருது திருப்பி அளிப்பது

சாகித்ய அகாடெமி விருது திருப்பி அளிப்பது

அவர்களால் எழுத முடியவில்லை என்றால் அதை முதலில் சொல்லட்டும். அதுக்கப்புறம் நாம அவங்கள பாத்துக்கலாம்.

இந்தி கல்வி

இந்தி கல்வி

மகேஷ் ஷர்மா இப்படி பல சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்துள்ள நிலையில், அப்துல்கலாம் தங்கியிருந்த வீட்டினை மகேஷ் ஷர்மாவிற்கு ஒதுக்கீடு செய்தது நியாயமா என்று கேட்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

English summary
The AAP government has strongly criticised the Centre’s decision to allot the bungalow of former President APJ Abdul Kalam to Union Tourism and Culture Minister Mahesh Sharma, claiming it was tantamount to an insult.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X