For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உ.பி. உள்ளாட்சித் தேர்தல்.. படுகேவலமாக மண்ணைக் கவ்விய பாஜக- அதிர வைக்கும் புள்ளி விவரங்கள்

உத்தரப்பிரதேச உள்ளாட்சித் தேர்தலில் பாஜக படுகேவலமாக தோல்வியைத் தழுவியிருப்பதை ஊடக பலத்தால் மூடி மறைக்கிறது.

By Mathi
Google Oneindia Tamil News

லக்னோ: உத்தரப்பிரதேச உள்ளாட்சித் தேர்தலில் அம்மாநில ஆளும் பாஜக அமோக வெற்றி பெற்றுவிட்டதாக துள்ளி குதிக்கிறார்கள்... ஆனால் புள்ளி விவரங்களோ ஆளும் பாஜக படுபயங்கரமான தோல்வியைத் தழுவி மண்ணைக் கவ்வியதுடன் மீசையில் மண்ணே ஒட்டலையே என வாய்ச்சவடால் பேசி வருவதை அம்பலப்படுத்தியிருக்கிறது.

உத்தரப்பிரதேசத்தில் 2012-ம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் மாநிலத்தின் 16 மேயர் பதவிகளையுமே பாஜகவே அள்ளியது. ஆனால் இம்முறை 14 இடங்களில் பாஜக வென்றது. பகுஜன் சமாஜ் 2 இடங்களைக் கைப்பற்றியது.

UP civic poll results and BJP real numbers

மொத்தம் 10,000-க்கும் அதிகமான வார்டுகளுக்கு 2 கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெற்றது. அதே போல் 438 நகர பஞ்சாயத்து தலைவர்கள், 198 நகராட்சி தலைவர் பதவிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது.

  • 5,390 நகர பஞ்சாயத்து வார்டுகளுக்கு நடைபெற்ற தேர்தலில் பாஜக வென்ற இடங்கள் 662 மட்டும்தான்.
  • 5,390 நகர பஞ்சாயத்துகளில் சுயேச்சைகள் மற்றும் இதர கட்சிகள் மொத்தமான வென்ற இடங்கள் 4,728.
  • 5,217 நகராட்சி வார்டுகளில் பாஜக வென்றது 914 மட்டும்தான்.
  • 5,2176 நகராட்சி வார்டுகளில் பாஜக தோற்ற இடங்கள் 4,303 என்பதை நினைவில் கொள்வோம்.
  • 437 நகர பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் 100 இடங்களில் பாஜக வென்றது; 337 இடங்களில் தோல்வியைத் தழுவியது.

- நகராட்சி தலைவர் தேர்தலில் 68 இடங்களில் மட்டும் வென்று 127 இடங்களில் தோற்றது பாஜக.

ஆக கூட்டி கழித்துப் பார்த்தால் பாஜக, உத்தரப்பிரதேசத்தில் படுதோல்வியைத்தான் சந்தித்திருக்கிறது. ஆனால் தமக்கு இருக்கும் ஊடக பலத்தாலும் எங்கே குஜராத்தில் மண்ணை கவ்வ நேரிடுமோ என்ற அச்சத்தாலும் அமோக வெற்றி பெற்றதாக அடித்து விட்டுக் கொண்டிருக்கிறது பாஜக.

English summary
Out of the 5,390 nagar panchayat seats for which results have been declared, the BJP could win only in 662 wards in Uttar Pradesh.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X