6 வருட காதல் முறிந்தது...சோகத்தில் தற்கொலையை காதலிக்கு லைவ் ஸ்ட்ரீம் செய்த மும்பை இளைஞன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தானே: 26 வயது இளைஞர் ஒருவர் காதலில் ஏற்பட்ட தோல்வியால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதோடு அதை காதலிக்கு வீடியோ கால் மூலம் நேரலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை அருகே உல்ஹாஸ்நகரைச் சேர்ந்த ஹனி அஷ்வனி என்ற 26 வயது இளைஞன் கடந்த மே 21ம் தேதி தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். இது குறித்து ஹனியின் தந்தை ஹில்லைன் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை ஜூன் 18ம் தேதி அளித்திருந்தார்.

 Upset over love failure lover livestreamed suicide to his girlfriend

அதில் அஷ்வனி கடந்த சில ஆண்டுகளாகவே பெண் ஒருவருடன் காதல் உறவில் இருந்ததாக தெரிவித்துள்ளார். ஏறத்தாழ சுமார் 6 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்துள்ளனர். ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிய முடிவு செய்து பிரிந்துவிட்டதாகவும் புகாரில் கூறியுள்ளார்.

மனஉளைச்சலால் தற்கொலை

இந்த காதல் முறிவு காரணமாக அஷ்வனி மின உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். இந்நிலையில் சம்பவம் நடந்த மே 21ம் தேதி இருவரும் சந்தித்து பேசியுள்ளனர். இதனையடுத்து வீடு திரும்பிய அஷ்வனி தனது அறையில் இருந்த மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அஷ்வனியின் தந்தை இரவு வீடு திரும்பிய போதே அவர் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது.

சிக்கிய ஆதாரம்

முதலில் தற்கொலை வழக்காக பதிவு செய்து போலீசார் இந்த வழக்கை விசாரித்து வந்தனர். இந்நிலையில் அஷ்வன் தற்கொலை செய்து கொள்ளும் வீடியோ கிடைத்ததையடுத்து அதனை போலீசாரிடம் அவரது குடும்பத்தார் ஒப்படைத்துள்ளனர்.

நேரலையில் தற்கொலை

அந்த வீடியோ ஆதாரத்தின் படி அஷ்வனி தற்கொலைக்கு முன் மிகுந்த மனஉளைச்சலுடன் காதலிக்கு வீடியோ கால் பேசியுள்ளார். மேலும் தன்னுடைய தற்கொலையை காதலிக்கு நேரலையும் செய்துள்ளார்.

விசாரணை

இந்நிலையில் தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் அஷ்வனியின் காதலி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இது வரை கைது நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளப்படாத நிலையில் போலீசார் இளம்பெண்ணிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
A 26 years old HaniAshwani commited suicide and live streamed the final moments to his girlfriend through a video call.
Please Wait while comments are loading...