“டேஞ்சர்”.. உஷாரா இருங்க! “அர்பன் நக்சல்கள்” மாறுவேடத்துல வராங்க - குஜராத்திகளை எச்சரித்த மோடி
காந்திநகர்: புதிய தோற்றத்துடன் அர்பன் நக்சல்கள் குஜராத் மாநிலத்திற்குள் நுழைய முயல்வதாகவும், அவர்கள் துடிப்பான இளைஞர்களை தவறான திசையில் வழிநடத்துவதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்து இருக்கிறார்.
குஜராத், இமாச்சல பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வரும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் நடைபெற இருக்கிறது. பாஜக ஆட்சியில் இருக்கும் இரு மாநிலங்களிலும் மீண்டும் ஆட்சியை பிடிக்க தற்போதே வியூகங்களை வகுத்து வருகிறது அக்கட்சித் தலைமை.
குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் ஆட்சியை தக்க வைக்கவும், கடந்த முறையை விட இம்முறை கூடுதல் தொகுதிகளை கைப்பற்றவும் தற்போது தீவிரம் காட்சி வருகிறது பாஜக.

குஜராத்தில் மோடி
எனவே குஜராத்துக்கு அடிக்கடி சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களையும் தொடங்கி வைத்து வருகிறார். குஜராத் மாநிலம் பரூச் மாவட்டத்தில் இந்தியாவின் முதல் மருந்து பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டது. இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி மருந்து பூங்காவிற்கு அடிக்கல் நாட்டினார்.

அர்பன் நக்சல்கள்
அதன் பின்னர் மக்கள் மத்தியில் உரையாற்றிய அவர், "அர்பன் நக்சல்கள் குஜராத் மாநிலத்திற்கு புதிய தோற்றத்தில் ஊடுருவத் தொடங்கி இருக்கிறார். அவர்கள் தங்களுடைய உடைகளையும் மாற்றிவிட்டார்கள். குஜராத்தில் துடிப்பான இளைஞர்களை அர்பன் நக்சல்கள் தவறான வழிகளில் நடத்துகின்றனர்.

இளம் தலைமுறை
இளம் தலைமுறை அர்பன் நக்சல்களால் அழிக்கப்படுவதை நாம் அனுமதிக்கவே கூடாது. இவர்கள் அந்நிய சக்திகளின் ஏஜெண்டுகள். இவர்கள் குறித்து நம்முடைய குழந்தைகளிடம் நாம் எச்சரிக்க வேண்டும். குஜராத் மாநிலம் இவர்களுக்கு ஒருபோதும் தலைவணங்காது. அவர்களை குஜராத் அழித்துவிடும்.

தமிழகத்தில் கொடுத்த பட்டம்
நான் கடந்த 2014 ஆம் ஆண்டு நாட்டின் பிரதமராக பதவியேற்ற சமயத்தில் பொருளாதாரத்தில் இந்தியா உலகளவில் 10 வது இடத்தில் இருந்தது. தற்போது 2022 ஆம் ஆண்டு நடந்து கொண்டிருக்கிறது. இன்று இந்தியா உலகளவில் 5 வது பெரிய பொருளாதார நாடாக உயர்ந்து உள்ளது." என்றார். தமிழ்நாட்டில் ஸ்டெர்லைட், மீத்தேன் எதிர்ப்பு போராட்டங்களில் ஈடுபட்டவர்களை அர்பன் நக்சல்கள் என பாஜகவினர் விமர்சனம் செய்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடியும் அர்பன் நக்சல்கள் குறித்து வாய் திறந்திருக்கிறார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications