ஆபரேஷன் செய்து கொண்டே ஆஜரான 'பலே' மருத்துவர்.. ஷாக்கான நீதிபதி!
கலிபோர்னியா: ஆபரேஷன் செய்து கொண்டே வீடியோ கான்ஃபரன்ஸ் மூலமாக வழக்கு விசாரணைக்கு ஆஜரான மருத்துவர் இப்போது சிக்கலில் மாட்டிக் கொண்டு முழித்து வருகிறார்.
அமெரிக்காவின் கலிபோர்னியாவையைச் சேர்ந்த ஸ்காட் கிரீன் எனும் பிளாஸ்டிக் சர்ஜன் மருத்துவர் மீது, டிராஃபிக் விதிமுறைகளை மீறியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்காக நீதிமன்ற அதிகாரிகள் மருத்துவரை தொடர்பு கொண்டு, வீடியோ கான்ஃபரன்ஸ் மூலமாக விசாரணைக்கு ஆஜராக முடியுமா என்று கேள்வி எழுப்பினர்.

அப்போது சார்வாள் ஆபரேஷன் செய்து கொண்டிருந்திருக்கிறார். விசாரணைக்கு அழைப்பு வந்த போது, ஆபரேஷன் செய்கையில் அணியும் உடை அணிந்து, கையில் கத்தி மற்றும் இன்ன பிற சமாச்சாரங்களுடன் நின்றிருக்கிறார். அறுவை சிகிச்சை இயந்திரங்களின் பீப் சப்தமும் ஒலித்துக் கொண்டிருந்திருக்கிறது.
இதையெல்லாம் பார்த்த நீதிமன்ற அலுவலர், 'நீங்கள் ஆபரேஷன் செய்து கொண்டிருக்கிறீர்கள் போலவே?' என்று கேட்க, மருத்துவரோ, 'ஆமாம். நான் இப்போது அறுவை சிகிச்சை ஒன்றை செய்து கொண்டிருக்கிறேன். எனினும், இப்போது விசாரணைக்கு தயார்' என்று கூறியிருக்கிறார்.
பிறகு நீதிபதி கேரி லிங்க் வந்து விசாரணையை தொடங்கும் போது, மருத்துவரின் கோட், சூட், கத்தி, செட்டப்பையெல்லாம் பார்த்து ஒரு நொடி ஜெர்க் ஆகி, 'இது சரி வராது. பேஷண்ட்டின் உடல்நலம் தான் முக்கியம்' என்று விசாரணையை நிறுத்திவிட்டார்.
இதற்கும் கூலாக பதிலளித்த நம்ம மருத்துவர், 'எனக்கு அருகில் வேறொரு மருத்துவர் உள்ளார். அவர் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வார். நீங்கள் விசாரணையை தொடங்கலாம்' என்று ஜட்ஜுக்கே ஆறுதல் சொல்ல, வேறொரு நாளில் விசாரணையை வைத்துக் கொள்ளலாம் என்று அந்த செஷனை முடித்துவிட்டார்.
எனினும், இந்த விவகாரம் கலிபோர்னியா மருத்துவ கவுன்சில் வரை செல்ல, மருத்துவரிடம் இதுகுறித்து விசாரணை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணைக்கு ஒரு விசாரணையா!! முடில...
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications