"மிக முக்கிய சந்திப்பு!" சவுதி இளவரசை சந்தித்தார் ஜோ பைடன்.. விரைவில் குறையும் கச்சா எண்ணெய் விலை?
ஜெட்டா: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சவுதி அரேபியா இளவரசர் முகமது பின் சல்மானை சந்தித்தது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
அமெரிக்க அதிபராக டிரம்ப் இருந்த காலத்தில் அவர் சவுதி அரேபியா இளவரசர் முகமது பின் சல்மான் உடன் நெருக்கம் காட்டி வந்தார். இருப்பினும், ஜோ பைடன் அதிபராகப் பதவியேற்றதும் நிலைமை மாறியது.
பத்திரிக்கையாளர் ஜமால் கஷோகி படுகொலை தொடங்கிப் பல சந்தர்ப்பங்களில் அதிபர் பைடன் சவுதிக்கு எதிராகக் கடுமையான நிலைப்பாடுகளையே எடுத்து இருந்தார்.

ஜோ பைடன்
இதனால் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு சற்று மோசம் அடைந்து இருந்தது. இந்தச் சூழலில் தான் சவுதி இளவரசர் முகமது பின் சல்மானை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சந்தித்து உள்ளார். மனித உரிமை மீறல்கள் தடுப்பது, சர்வதேச நீர் ஏற்றுமதியை அதிகப்படுத்துவது என பல்வேறு விஷயங்கள் அமெரிக்கா சார்பில் இந்தச் சந்திப்பில் வலியுறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

பிரச்சினைகள்
இந்தச் சந்திப்பில் மனித உரிமைகள் மீறப்படுவது குறித்து வலியுறுத்தியதாக பைடன் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "ஒரு அமெரிக்க அதிபராக மனித உரிமைகள் பிரச்சினையில் என்னால் அமைதியாக இருக்க முடியாது. எனக்கு தவறாகப்படும் விஷயங்கள் குறித்து நான் எப்போதும் குரல் கொடுப்பேன். கஷோகியின் மரணத்திற்குத் தாம் தனிப்பட்ட முறையில் பொறுப்பல்ல என்று முகமது சல்மான் என்னிடம் கூறினார்" என்று பைடன் தெரிவித்தார்.

ஏன் முக்கியம்
பத்திரிக்கையாளர் கஷோகி படுகொலைக்குப் பின்னர், இளவரசர் முகமதுவிடம் பேச அதிபர் பைடன் நீண்ட காலமாக மறுத்துவிட்டார். ஆனால் ஈரானின் அணுசக்தி முயற்சிகள், உக்ரைன் போர் காரணமாக எரிவாயு விலை உயர்வு உள்ளிட்ட பிற காரணங்களால் இப்போது முகமது பின் சல்மானை பைடன் நேரில் சந்தித்து உள்ளார். மறுபுறம் சவுதியும் அமெரிக்காவுடனான தனது பாதுகாப்பு மற்றும் பொருளாதார உறவை மேம்படுத்த விரும்புவதால் இந்தச் சந்திப்பு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது

கச்சா எண்ணெய்
தற்போது இருக்கும் சர்வதேச நிலையைக் கருத்தில் கொண்டே இரு தலைவர்களின் சந்திப்பு நடந்துள்ளது. செங்கடல் தீரான் தீவில் இருக்கும் அமெரிக்க அமைதிப்படை இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியேறும் என பைடன் இந்த சந்திப்பில் அறிவித்தார். இதன் மூலம் தீரான் தீவை சவுதியால் சுற்றுலாத் தலமாக மேம்படுத்த முடியும். இருப்பினும் தீரான் தீவை விட்டு அமெரிக்கா வெளியேற இஸ்ரேல் ஒப்புதல் தேவை என்பது குறிப்பிடத்தக்கது.

உற்பத்தி அதிகரிக்கும்?
அதேபோல ஏமன் விவகாரத்தில் போர் நிறுத்தம் நீட்டிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பைடன் தெரிவித்தார். இவை அனைத்தையும்விட, சர்வதேச சந்தையில் அதிகரிக்கும் கச்சா எண்ணெய் விலையைக் குறைக்க உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்பதே பைடனின் இந்த பயணத்தின் முக்கிய நோக்கம் ஆகும். OPEC+ நாடுகளின் ஒப்பந்தம் செப்டம்பரில் முடியும் நிலையில், அதன் பின்னர் உற்பத்தி கணிசமாக அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

சவுதிக்கு வெற்றி
அமெரிக்க அதிபர் பைடனின் சவுதி பயணம் சவுதி இளவரசர் முகமது பின் சல்மானுக்கு வெற்றியாகவே பார்க்கப்படுகிறது. அமெரிக்கா உடனான தனது உறவை மேம்படுத்திக் கொள்ள பின் சல்மான் விரும்பிய நிலையில், அதற்கு இந்த சந்திப்பு மிக முக்கியமானதாக இருக்கும். இதன் மூலம் மனித உரிமை நெருக்கடி குறித்த பிரச்சினைகளை ஓரம்கட்டிவிட்டு, முதலீடுகளை ஈர்க்க முடியும் என்று சவுதி நம்புகிறது.
-
நள்ளிரவில் பாய்ந்த அமெரிக்க ஏவுகணைகள்... அதிகாலையில் திருப்பி அடித்த ஈரான்! மீண்டும் வெடிக்கும் போர் -
ஈரான் பந்தர் அப்பாஸில் அமெரிக்க தாக்குதல்.. வேலையை காட்டிய டிரம்ப்.. அப்போ அமைதி எல்லாம் கனவுதான் -
அமெரிக்க பொருளாதாரம் அபாயத்தில் உள்ளதா? ஜகா வாங்கும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்.. வெளியானது முக்கிய அறிகுறி! -
குவைத்தில் தாக்குதல்.. புகுந்து அடித்த அமெரிக்காவுக்கு பதிலடி கொடுத்த ஈரான்.. உச்சகட்ட பதற்றத்தில் வளைகுடா! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்!












Click it and Unblock the Notifications