உ.பி.யை நடுநடுங்க வைக்கும் கடும் குளிர்: ஒரே நாளில் 18 பேர் பலி!
டெல்லி: உத்திரப்பிரதேசத்தில் நிலவும் கடும் குளிருக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 70 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 18 பேர் குளிரால் உயிரிழந்துள்ளனர்.
வட இந்தியாவின் பல பகுதிகளில் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடும் பனிப்பொழிவு நிகழ்ந்து வருகிறது. இதனால் அங்குள்ள சாலைகளில் இரண்டு மீட்டர் உயரத்திற்கு பனி மூடப்பட்டுள்ளது. எதிரில் வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு அங்கு கடும் பனிப்பொழிவு நிலவுவதால், வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.

கடும் குளிரை மக்கள் தாங்கும் வகையில் இரவு நேர முகாம்களை அம்மாநில அரசு அமைத்துள்ளது. மேலும், குளிரைத் தாங்கும் வகையில் கம்பளி போன்ற பாதுகாப்புப் பொருட்களையும் வழங்கி வருகிறது. இதற்கென மாவட்டத்திற்கு தலா ரூ. 3,45 லட்சம் என 75 மாவட்டங்களுக்கு ரூ. 1.63 கோடியை அம்மாநில அரசு ஒதுக்கியுள்ளது.
இது மட்டுமின்றி குளிர்கால நிவாரண நிதியாக நவம்பர் 12 அன்று 17.98 லட்ச ரூபாய் ஒதுக்கியுள்ளதாகவும், தற்போது கூடுதலாக ஒவ்வொரு தாலுகாவிற்கும் 50,000 ரூபாய் வழங்கப்படுமென்றும் அரசின் நிவாரணத்துறை ஆணையரான லீனா ஜாஹரி அறிவித்துள்ளார்.
அரசு இவ்வளவு நடவடிக்கைகள் மேற்கொண்ட போதும் தொடர்ந்து அங்கு குளிருக்கு பலியானவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் 18 பேர் குளிருக்கு பலியானதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், இம்மாதத்தில் உத்திரப்பிரதேசத்தில் குளிருக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 70 ஆக உயர்ந்துள்ளது.
அம்மாநிலத்தின் பல இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 4-10 டிகிரி என்ற அளவிலும், குறைந்த பட்ச வெப்பநிலை 3-5 டிகிரியாகவும் இருந்து வருகிறது. குறைந்தபட்சமாக முசாபர் நகரில் 2.4 டிகிரியும், லக்னோவில் 2.5 டிகிரியும் வெப்பநிலை பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications