இரவில் கணவனுக்கு பாசத்துடன் "பாயாசத்தை" போட்ட மனைவி.. ஆடிப்போன உத்தரப் பிரதேசம்.. ஸ்பெஷலே இதுதான்
கான்பூர்: பிங்கிக்கு கல்யாணத்துக்கு முன்பே இன்னொரு ஆணுடன் பழக்கம் இருந்ததாகவும், அவரது விருப்பத்துக்கு மாறாக அனுஜ்ஜை திருமணம் செய்து வைத்துவிட்டதாகவும் சொல்கிறார்கள்.. மகளின் விருப்பத்தை பெற்றோர் கேட்டிருந்தால், இப்படியொரு துர்சம்பவம் நடந்திருக்காது என்று கிராமத்தினரும், கணவரின் பேச்சை மனைவி கேட்டிருந்தால், ஒரு உயிர் தப்பியிருக்குமே என்றும் உறவினர்களும் கண்ணீர் வடித்து சொல்கிறார்கள்.. அப்படி என்ன நடந்தது?
உத்தரப் பிரதேசத்தில் முசாபர்நகரின் பகேலா கிராமத்தை சேர்ந்தவர் அனுஜ் ஷர்மா.. இவருக்கு 30 வயதாகிறது.. பிங்கி என்ற 26 வயது பெண்ணுடன் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.. இந்த திருமணத்தை இரு வீட்டு பெற்றோர்கள் சேர்ந்து முறைப்படி செய்து வைத்துள்ளனர்.

திருமணம் முடிந்து சில காலம் இருவருமே மகிழ்ச்சியாக வாழ்ந்துள்ளனர். ஆனால், நாளுக்கு நாள் தம்பதி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, தகராறு வெடித்துள்ளது.. இதற்கு காரணம், பிங்கி ஏற்கனவே ஒரு இளைஞரை காதலித்து வந்துள்ளார்.. பெற்றோர்கள் கட்டாயத்தில் திருமணம் செய்து கொண்டதால், தன்னுடைய காதலனை மறக்க முடியாமல் பிங்கி தவித்து வந்துள்ளார்.
காதலனிடம் உருக்கம்
அதற்கேற்றவாறு அந்த காதலனும் பிங்கிக்கு போன் செய்து, "என்னை விட்டுட்டு போயிட்டியே" என்று கண்ணீர் மல்க கேட்டுள்ளார்.. இதைக்கேட்டு மனம் உருகிய பிங்கி, திருமணம் முடிந்தும்கூட, காதலனிடம் தொடர்ந்து போனில் பேசி வந்துள்ளதாக தெரிகிறது.
இந்த விஷயம் தெரிந்து, கணவர் அனுஜ் சர்மா அதிர்ச்சி அடைந்துள்ளார்.. முன்னாள் காதலனை சந்தித்து பேசக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார். இதனால் இருவருக்கிடையேயும் தகராறு மேலும் அதிகமாகி கொண்டே வந்தது.
துள்ளி குதித்த கணவர்
சில நாட்களுக்கு முன்பு, இது தொடர்பான தகராறு வெடிக்கவும், பிங்கியை பளார் என்று அறைந்துள்ளார் அனுஜ்.. இதனால் உச்சக்கட்ட ஆத்திரம் அடைந்த பிங்கி, நேராக போலீசில் சென்று, கணவர் மீது புகார் தந்துவிட்டு, தன்னுடைய அம்மா வீட்டுக்கும் கோபித்து கொண்டு போய்விட்டார்.. பிறகு மீண்டும் கடந்த 25ம் தேதி பிங்கியே, தானாக அனுஜ் வீட்டுக்கு வந்தார்.. மனம் மாறி வீட்டுக்கு வந்த மனைவியை கண்டதுமே துள்ளி குதித்தார் அனுஜ்.

பொதுவாக, இரவு நேரத்தில் கணவன் காபி குடிப்பதில்லை என்றாலும், திடீரென அன்றைய தினம் சுடச்சுட காபி போட்டுக் கொண்டு கணவனுக்கு தந்துள்ளார். அந்த காபியில் விஷம் கலந்து தந்ததாக தெரிகிறது. அதைக்குடித்ததும் அனுஜ் மயக்கமாகி கீழே விழுந்துவிட்டார். அந்த நேரம்பார்த்து அனுஜின் சகோதரி மீனாட்சி தற்செயலாக வீட்டுக்கு வந்துள்ளார்..
இன்னும் பிங்கி கிடைக்கவில்லை
பேச்சுமூச்சின்றி கீழே விழுந்த சகோதரனை கண்டதும் பதறிப்போய், கட்டௌலியில் உள்ள ஒரு மருத்துவமனையில் கொண்டு சென்று அனுமதித்தார்.. ஆனால், அங்கு சென்றும்கூட, அனுஜின் உடல்நிலை மோசமாகவே இருந்ததால், வேறொரு மருத்துவமனைக்கு உயர் சிகிச்சைக்காக அனுமதித்தார்.
அதற்குள் விஷயம் தெரிந்து போலீசார் மருத்துவமனைக்கு வந்துவிட்டார்கள்.. அவர்களிடம் மீனாட்சி நடந்ததை பற்றி கூறி, பிங்கி மீது போலீசில் புகாரும் தந்தார்.. ஆனால், அதற்குள் பிங்கி எஸ்கேப் ஆகிவிட்டார்.. அவரை போலீசார் வலைவீசி தேடி கொண்டிருக்கிறார்கள்..
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications