உத்தரகாண்ட்டில் இயற்கை பேரழிவு.. உடைந்த பனிப்பாறைகள்.. பயங்கர வெள்ளபெருக்கு.. என்ன நடந்தது! ஷாக்
டேராடூன்: உத்தரகாண்ட் சமோலி மாவட்டத்தில் பனிப்பாறைகள் உடைந்து உருகியதால் தெளளிகங்கா ஆற்றில் திடீரென கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில 100 முதல் 150 பேர் உயிரிழந்திருக்க வாய்ப்பு உள்ளதாக அம்மாநில முதல்வரே அச்சம் தெரிவித்துள்ளார். அங்கு என்ன நடந்தது என்பதை இப்போது பார்ப்போம்.
Nanda Devi glacier broke off in Chamoli district of #Uttarakhand Sunday morning.Damaged a dam on Alaknanda river. Rise in water level in river. Reports of loss awaited. @IndianExpress pic.twitter.com/J0UoBoIJEe
— Lalmani Verma (@LalmaniVerma838) February 7, 2021
உத்தரகண்ட் மாநிலத்தின் சாமோலி மாவட்டத்தில் ஜோஷிமாத்தின் தபோவன் பகுதியில் இன்று காலை நந்தா தேவி பனிப்பாறையின் ஒரு பகுதி உடைந்து, அலக்நந்தா ஆற்றில் உள்ள ரிஷிகங்கா அணை சேதம் அடைந்தத. இதில் குறைந்தபட்சம் 150 தொழிலாளர்கள் காணாமல் போனதாக தகவல் வெளியாகி உள்ளது.
ரிஷிகங்கா மின் திட்டத்தில் பணிபுரியும் 150 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நேரடியாக பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று மாநில பேரிடர் மறுமொழிப் படை டி.ஐ.ஜி ரிதிம் அகர்வால் தெரிவித்தார்.

அச்சம்
"மின் திட்டத்தின் ஊழியர்கள் என்னிடம் தங்கள் 150 தொழிலாளர்களை திட்ட தளத்தில் இருந்தனர். அவர்கள தொடர்பு கொள்ள முடியவில்லை என்று என்னிடம் கூறியுள்ளனர் என்று கூறியுள்ளார் ரிதம் அகர்வால்.

மக்களுக்கு அலார்ட்
உத்தரகண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் மாநில பேரிடர் மேலாண்மை மற்றும் சாமோலி நிர்வாக அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தி உள்ளார். கங்கை நதிக்கு அருகே மக்கள் யாரும் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. பழைய வெள்ள வீடியோக்கள் மூலம் வதந்திகளை பரப்ப வேண்டாம் என்றும் உத்தரகாண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.

பனிப்பாறை உடைந்தது
அங்குள்ள அரசு அதிகாரிகள் இதுபற்றி கூறுகையில், பாதிக்கப்பட்ட பகுதிக்கு மீட்பு குழுக்கள் விரைந்து சென்றுள்ளது. இதுவரை உயிரிழந்ததாக எந்த தகவலும் இல்லை. எஸ்.டி.ஆர்.எஃப் அதிகாரி ஒருவர் கூறுகையில், ரெய்னி கிராமத்தில் ஒரு பனிப்பாறை உடைந்துவிட்டதாக ஜோஷிமாத்தைச் சேர்ந்த ஒரு தலைமை கான்ஸ்டபிள் இன்று காலை கட்டுப்பாட்டு அறைக்குத் தெரிவித்தார். இரண்டு நாட்களுக்கு முன்பு நந்தா தேவியில் பனிச்சரிவு ஏற்பட்டதால் நடந்திருக்கிறது என்றார்.

படைகள் அனுப்பினோம்
பிரதமர் நரேந்திர மோடி இது தொடர்பாக ட்வீட் செய்துள்ளார். அவர் தனது பதிவில் "உத்தரகாண்ட் மாநிலத்தின் துரதிர்ஷ்டவசமான நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருகிறேன். மொத்த இந்தியாவும் உத்தரகண்ட் உடன் நிற்கிறது, அங்கு அனைவரின் பாதுகாப்பிற்காக தேசம் பிரார்த்தனை செய்கிறது. மூத்த அதிகாரிகளுடன் தொடர்ந்து பேசுவதோடு, என்.டி.ஆர்.எஃப் படைகளை அனுப்புதல், மீட்பு பணிகள் மற்றும் நிவாரண நடவடிக்கைகள் குறித்து விசாரித்து வருகிறேன் என்றார்.

உதவி செய்வோம்
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் ட்வீட் செய்துள்ளார்: "உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட இயற்கை பேரழிவு குறித்து, முதல்வர் டி.எஸ். ராவத், ஐ.டி.பி.பி மற்றும் என்.டி.ஆர்.எஃப். சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளும் மக்களை மீட்பதற்காக பெரும் பணியில் ஈடுபட்டுள்ளனர். என்.டி.ஆர்.எஃப் குழுக்கள் மீட்புப் பணிகளுக்காக புறப்பட்டுள்ளன. கடவுளின் பூமியான உத்தரகாண்டிற்கு சாத்தியமான ஒவ்வொரு உதவியும் வழங்கப்படும் என்று அமித்ஷா உறுதி தெரிவித்துள்ளார்.