Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கும்பமேளா முடித்து திரும்ப முடியாமல் திணறும் பக்தர்கள்.. 30 மணி நேரமாக பிரயாக்ராஜ்-ல் டிராபிக் ஜாம்

Subscribe to Oneindia Tamil

பிரக்யராஜ்: உத்தரப்பிரதேசத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பமேளாவில் பங்கேற்பதற்காக லட்சக்கணக்கான மக்கள் வருகை தந்து வருகின்றனர். இந்நிலையில், பிரக்யராஜில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் காரணமாக 30 மணி நேரத்துக்கும் மேலாக நெரிசலில் சிக்கி நூற்றுக்கணக்கான மக்கள் தவித்து வருகின்றனர்.

உத்தரப்பிரதேசத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகா கும்பமேளா நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த கும்பமேளா நிகழ்ச்சி ஜனவரி 13 ஆம் தேதி தொடங்கியது. இது பிப்ரவரி 26ஆம் தேதி வரை என மொத்தம் 45 நாட்களுக்கு நடைபெறவுள்ளது. கும்பமேளாவையொட்டி, 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. 1800 ஹெக்டேர் பரப்பளவில் வாகன நிறுத்த வசதிகள், 2,750 கண்காணிப்பு கேமராக்கள், 15 ஆயிரம் துப்புரவு பணியாளர்கள், 25 ஆயிரம் தொழிலாளர்கள், 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு மையம் உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன.

kumbhmela 2025 uttarpradesh traffic 2025

திரிவேணி சங்கமத்தில் புனித நீராட 15 கோடிக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வருகை தந்துள்ளனர். கடந்த செவ்வாய்க்கிழமை மட்டும் 4.8 கோடி மக்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர். மகா கும்பமேளாவில் 40 கோடி பக்தர்கள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாளுக்கு நாள் கும்பமேளாவுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதைத்தொடர்ந்து, வாகனங்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நேற்று கும்பமேளாவில் கலந்து கொண்டு திரும்பும்போது ஏற்பட்ட போக்குவரத்து நெருக்கடியில் பல நூற்றுக்கணக்கான மக்கள் சிக்கினர். 30 மணி நேரத்துக்கும் மேலாக பல கி.மீ தொலைவுக்கு நீடித்த போக்குவரத்து நெரிசல் காரணமாக வெளியில் வர முடியாமல் மக்கள் கடும் அவதியடைந்தனர். குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்காக மக்கள் அவசர உதவியும் கேட்டனர்.

பிரக்யராஜ் மாவட்ட நிர்வாகம் போக்குவரத்து நெரிசல் பிரச்னையை எடுத்த நடவடிக்கைக்கும் எந்த தீர்வும் கிடைக்கவில்லை. மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் கூறுகையில், "கண்ணுக்கு எட்டிய தூரம் வரை போக்குவரத்தில் சிக்கிய பேருந்துகள் மட்டுமே தெரிந்தன. நாங்கள் முற்றிலுமாக பொறுமையை இழந்துவிட்டோம். தயவு செய்து எங்களை இந்த போக்குவரத்து நெரிசலில் இருந்து காப்பாற்றுங்கள்.

நூற்றுக்கணக்கான பேருந்துகளில் ஆயிரக்கணக்கான மக்கள் சிக்கியுள்ளனர். அவர்களை காப்பாற்றுங்கள். மாலை 4 மணிக்கு பிரக்யராஜில் இருந்து புறப்பட்டோம். கான்பூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக டெல்லி செல்வதற்கு முயற்சித்தோம். ஆனால் அந்த கிராமத்தை விட்டே எங்களால் நகர முடியவில்லை. முதலில் வெளியில் செல்பவர்களை அனுமதித்து, அதன் பிறகு உள்ளே வருவோரை அனுமதிக்க வேண்டும்." என்றார்.

மற்றொரு பெண் பக்தர் கூறுகையில், "இன்டர்நெட் முடங்கிவிட்டது. 150க்கும் மேற்பட்ட மக்கள் ஒன்றிணைந்து வந்துள்ளோம். ஜனவரி 27 ஆம் தேதி இரவு பிரக்யராஜ் புறப்பட்டோம். 28 ஆம் தேதி இங்கு வந்தோம். நேற்று பார்க்கிங் வருவதற்காக 12 கி.மீ தூரம் நடந்தோம். இங்கு உணவு கிடைப்பதில்லை. மக்கள் சாலையிலேயே தூங்குகிறார்கள். நாங்கள் இன்னும் கிராம சாலையில் தான் இருக்கிறோம். இங்கு பேருந்துகளை தவிர எதுவும் தெரியவில்லை. எங்களுடன் முதியவர்கள் உள்ளனர். இதை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்றார்.

பிரக்யராஜ் டிஐஜி அஜய் பால் கூறுகையில், "கிராம சாலைகள் தொடங்கி தேசிய நெடுஞ்சாலை வரை அனைத்து சாலைகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து வாகனங்கள் நகர்ந்து கொண்டு தான் இருக்கின்றன. புகார்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுத்து மக்களுக்கு உதவி செய்ய முயற்சித்து வருகிறோம். மக்களுக்கு தேவையான உதவிகளை காவல்துறைசெய்யும்." என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+