காவிரி.. ஒசூர் எல்லையில் கன்னட அமைப்பினர் முற்றுகை போராட்டம்.. பீதியில் கர்நாடக தமிழர்கள்
Recommended Video

பெங்களூர்: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கூடாது என வலியுறுத்தி தமிழக எல்லையில் கன்னட அமைப்பினர் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகத்தில் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. இதுபோன்ற நடவடிக்கைகளால் கன்னட அமைப்புகள் கடும் கோபத்தில் உள்ளன. தமிழகத்தில் முழு கடையடைப்பு நடத்தினால் தமிழக எல்லையை முற்றுகையிடுவோம் என வாட்டாள் நாகராஜ் தலைமையிலான கன்னட அமைப்பினர் எச்சரித்திருந்தனர்.

அதன்படி பெங்களூர்-ஒசூர் எல்லையான அத்திபள்ளி பகுதியில் வாட்டாள் நாகராஜ் தலைமையில் கன்னட அமைப்பினர் இன்று மதியம் முற்றுகை போராட்டம் நடத்தினர். இதையடுத்து தமிழக எல்லையை நோக்கி நடக்க ஆரம்பித்தனர். எனவே போலீசார் அவர்களை கைது செய்தனர்.
இந்த நிலையில், தமிழகத்தில் இன்று திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பந்த் நடத்தின. இதற்கு பதிலடியாக வரும் 12ம் தேதி கர்நாடகாவில் பந்த் நடத்த கன்னட அமைப்புகள் அழைப்புவிடுத்துள்ளன.
கன்னட அமைப்பினரின் இதுபோன்ற நடவடிக்கையால் கர்நாடகவாழ் தமிழர்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது.
-
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications