புக் ஃபேரில் ஷாக்.. முஸ்லீம் விற்பனையாளரை அடித்து உதைத்த.. விஎச்பி பெண்கள்.. கொடூர சம்பவம்!

Subscribe to Oneindia Tamil

போபால்: மத்தியப் பிரதேசத்தில் புத்தக திருவிழாவில், புத்தகங்களை டோர் டெலிவரி செய்ய செல்போன் நம்பர் கேட்டதற்காக முஸ்லீம் புத்தக விற்பனையாளர் ஒருவர் விஎச்பி அமைப்பை சேர்ந்த பெண்களால் சரமாரியாக தாக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜைன் பகுதியில் புத்தக திருவிழா நடந்து வருகிறது. இங்கு ஆயிரக்கணக்கில் புத்தகங்கள் விற்பனைக்காகவும், பார்வைக்காகவும் வைக்கப்பட்டுள்ளன. இந்த புத்தக திருவிழாவில் வக்கார் சலீம் எனும் நபரும் ஸ்டால் ஒன்றை அமைத்து புத்தக விற்பனையில் ஈடுபட்டிருக்கிறார். அப்போது அந்த வழியாக வந்த பெண்கள் குழு ஒன்று புத்தக விற்பனை தொடர்பாகவும், டெலிவரி தொடர்பாகவும் விசாரித்திருக்கிறது.

VHP women attack Muslim book sellers in Madhya Pradesh

இது குறித்து விளக்கமளித்த வக்கார் சலீம், டோர் டெலிவரிக்கு செல்போன் எண் அவசியம் என்று கூறி நம்பர் கேட்டதாக சொல்லப்படுகிறது. உடனடியாக இந்த குழுவில் இருந்த பெண்கள் சலீமை சரமாரியாக தாக்க தொடங்கியுள்ளனர். இந்த சம்பவம் சுற்றி இருந்த நபர்களால் வீடியோவாக படம் பிடிக்கப்பட்டு சோஷியல் மீடியாக்களில் வேகமாக பகிரப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக விசாரணையில் இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டது விஷ்வ இந்து பரிஷித் (விஎச்பி) அமைப்பை சேர்ந்த பெண் நிர்வாகிகள் என்பது தெரிய வந்துள்ளது.

இந்த சமபவம் குறித்து விஎச்பி அமைப்பை சேர்ந்த பெண்கள் விளக்கமளிக்கையில், "இந்து பெண்களின் விவரங்களை சேகரிக்க சலீம் முயன்றிருக்கிறார்" என்று குற்றம்சாட்டியுள்ளனர். இவர்கள் சலீமை சரமாரியாக தாக்கி புத்தக திருவிழா நடைபெறும் இடத்திலிருந்து வெளியே இழுத்து வந்து காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். வழியில் சலீமின் பர்ஸ் மற்றும் ஆதார் அட்டை காணாமல் போயுள்ளன. இந்த தாக்குதல் சம்பவம் விஎச்பியின் மாவட்டத் துணைத் தலைவர் ரிது கபூர் தலைமையில் நடைபெற்றுள்ளது.

சலீம் பஞ்சாபின் குர்தாஸ்பூரில் பகுதியை சேர்ந்தவராவார். இவர் தனது ஸ்டாலில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சில புத்தகங்கள் விற்று தீர்ந்திருக்கின்றன. இந்த தீர்ந்து போன புத்தகம் குறித்து விஎச்பி பெண்கள் விசாரித்தபோது, புத்தகம் மீண்டும் பதிப்பித்து வந்தவுடன் வீட்டிற்கே டெலிவரி செய்துவிடுவதாகவும், அதற்காக முகவரி மற்றும் செல்போன் எண்ணை பதிவேட்டில் குறிப்பிடும்படியும் கேட்டிருக்கிறார். இதை கேட்டுதான் விஎச்பி அமைப்பை சேர்ந்த பெண்கள் அவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். சம்பவத்தையடுத்து சலீம் மீது மத்தியப் பிரதேச காவல்துறை வழக்குப்பதிவு செய்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+