அநாகரீகத்தின் உச்சம்... டாக்டராக நடித்து பிரசவித்த பெண்ணை நிர்வாணப்படம் எடுத்த இளைஞர்!
விஜயவாடா: ஆந்திராவில் டாக்டராக நடித்து, பிரசவித்த பெண்ணை நிர்வாணமாக படம் பிடித்த இளைஞரை பொதுமக்கள் கையும் களவுமாக பிடித்து தர்மஅடி கொடுத்து, போலீசில் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் விஜயவாடா மாவட்டத்தில் உள்ள மைலாவரம் பகுதியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அறுவை சிகிச்சை மூலம் குழந்தைப் பெற்ற பெண் ஒருவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டிருந்தார்.

இந்நிலையில், நேற்று காலை அப்பெண்ணின் வார்டுக்கு ராமகிருஷ்ணா என்பவர் ஒருவர் வந்துள்ளார். உதவி டாக்டர் என தன்னை அறிமுகப் படுத்திக் கொண்ட அந்த இளைஞர், சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டிருந்த அப்பெண்ணின் ஆடைகளைக் களைந்து நிர்வாணமாக தனது செல்போனில் புகைப்படம் எடுக்கத் தொடங்கினார்.
அப்போது அங்கு வந்த நர்ஸ் ஒருவர் இதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். அந்த இளைஞரிடம் அவர் நடத்திய விசாரணையில் அவர் டாக்டர் இல்லை என்பது கண்டுபிடிக்கப் பட்டது.
அதனைத் தொடர்ந்து உதவி கேட்டு நர்ஸ் கூச்சல் போடவே, மருத்துவமனையில் இருந்த பொதுமக்கள் விரைந்து வந்து, அந்த இளைஞரை வளைத்துப் பிடித்து சரமாரியாக அடித்து உதைத்தனர்.
பின்னர் அந்த இளைஞர் போலீசில் ஒப்படைக்கப்பட்டார். தற்போது அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
டாக்டர் வேடத்தில் மருத்துவமனைக்குள் புகுந்து பிரசவித்த பெண்ணை நிர்வாணமாக புகைப்படம் எடுத்த சம்பவம் அப்பகுதியில் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications