சசிகலாவுக்கு உடந்தை.. பெங்களூர் சிறை கண்காணிப்பாளர் அனிதாவிடம் 1 மணி நேரம் துருவி துருவி விசாரணை

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: சிறையில் விதிமீறல் நடைபெற்றது தொடர்பாக அந்த சிறையின் கண்காணிப்பாளர் ரூபாவிடம் ஒரு மணி நேரம் துருவி, துருவி விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

சசிகலா உள்ளிட்ட விஐபி கைதிகளுக்கு பெங்களூர் மத்திய சிறையில், சலுகை காட்டப்பட்ட விவகாரம் தொடர்பாக, முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி வினய்குமார் தலைமையில் உயர்மட்ட குழு விசாரணை நடைபெற்று வருகிறது.

Vinay Kumar committee summoned Bangalore jail officer Anita and questioned her for over one hour

நேற்று அவர் சிறையில் ஆய்வு செய்தார். அப்போது முன்னாள் சிறைத்துறை டிஐஜி ரவி உடனிருந்தனர். அவர் கண்காணிப்பாளர் அனிதாவிடம் 1 மணி நேரம் விசாரணை நடத்தினார்.

அனிதாதான், சமீபத்தில் வெளியான சசிகலா ஷாப்பிங் செல்வது போன்ற வீடியோவில் அவரோடு நடந்து செல்பவர். அனிதா பெரும் முறைகேடுகளில் ஈடுபடுபவர் என சிறை கைதிகள் குற்றம்சாட்டி தர்ணா நடத்தி வருகிறார்கள்.

நேற்று காலையில்கூட அனிதா மீது குற்றம்சாட்டி காலை சிற்றுண்டியை புறக்கணித்து சிறைக் கைதிகள் போராட்டம் நடத்தினர். இந்த நிலையில், அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு, புகார்கள் குறித்து துருவி துருவி கேட்கப்பட்டுள்ளது.

முன்னதாக, சசிகலா அறைக்குச் சென்றும் வினய்குமார் விசாரணை நடத்தியுள்ளார். மீடியாக்களிடம் பேசிய வினய்குமார், முழு அளவுக்கு விசாரணை அறிக்கை தயாரானதும் அரசிடம் சமர்ப்பிக்கப்படும். விசாரணை முடியும் வரை அதுகுறித்த எந்த தகவலையும் தெரிவிக்க முடியாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Former IAS officer Vinay Kumar, head of the committee probing the alleged irregularities in Central Prison (Parappana Agrahara), visited the jail in southeast Bengaluru on Wednesday afternoon.
Please Wait while comments are loading...