எல்லாப் பெண்களையும் போலத்தாய்யா அனுஷ்காவும்.. சலித்துக் கொள்ளும் கோஹ்லி
மும்பை: அனுஷ்கா உடன் இருந்தால் பூஸ்ட், ஓவல், ஹார்லிக்ஸ், போர்ன்விட்டா என எல்லா ஊட்டச் சத்து பானங்களையும் ஒன்றாகப் போட்டு கலக்கி அப்படியே குடிப்பது போல பூரிப்பாகி விடும் விராத் கோஹ்லிக்கு அனுஷ்கா விஷயத்தில் ஒரே ஒரு குறை மட்டும்தான் இருக்கிறதாம். அதைக் கூட கோஹ்லி சொல்லவில்லை, அனுஷ்தான் சொல்லியுள்ளார்.
அட இது என்ன கலாட்டா என்று என்னைக் கேட்காதீர்கள்.. இப்படிச் சொன்ன அந்தப் பெண்ணைக் கேளுங்கள்.
மும்பையில் நேற்று இரவு நடந்த வோக் பியூட்டி விருது வழங்கும் விழாவுக்கு முதல் முறையாக அதிகாரப்பூர்வமாக தனது வருங்கால மனைவியுடன் கை கோர்த்து வாயெல்லாம் பல்லாக, முகமெல்லாம் பெருமை பொங்க வந்திருந்தார் கோஹ்லி.

எல்லாக் கண்களும் இவர்கள் மீதே
விருது விழாவுக்கு வந்த அத்தனை பேர் கண்களும் கோஹ்லி - அனுஷ்கா மீதுதான். அதை உணர்ந்து அனுஷ்காவும் முகமெல்லாம் பூரிப்பு வெடிக்க புதுப் பொலிவுடன் காணப்பட்டார்.

முதல் முறையாக
இந்தியாவில் ஒரு ரெட் கார்பெட் விழாவுக்கு இருவரும் ஜோடி போட்டு வந்தது இதுவே முதல் முறை என்பதால் அத்தனை கேமராக்களும் இந்த ஜோடி மீது பிளாஷ் மழையைப் பொழிந்தபடி இருந்தனர். அவர்களும் தடுக்காமல் சலிக்காமல் போஸ் கொடுத்தபடி இருந்தனர்.

லண்டன் பயணத்தின் முடிவில்
சமீபத்தில்தான் லண்டனுக்கு அனுஷ்காவுடன் போயிருந்தார் கோஹ்லி. அங்கு இருவரும் சேர்ந்து விம்பிள்டன் டென்னிஸ் போட்டியைப் பார்த்தனர். கூடவே சச்சின் தம்பதியும் வந்திருந்தனர்.

செம ஷாப்பிங்
அத்தோடு செமையாக ஷாப்பிங்கும் செய்தார்களாம் இருவரும். என்ன வாங்கினார்கள் என்பது தெரியவில்லை. ஒரு வேளை கல்யாணத்திற்குத் தேவையானவற்றை வாங்கிக் குவித்திருக்கலாம் என்று தெரிகிறது.

ஒரே ஒரு குறைதான் பாஸ்
இந்த வழாவில் கோஹ்லியைப் பற்றி புகழ்ந்து பேசிய அனுஷ்கா, என்னிடம் குறை கூற விராத் கோஹ்லிக்கு ஒரே ஒரு விஷயம்தான் இருக்கும் என்று நினைக்கிறேன் என்று சிரித்தபடி கூறினார்.

அது என்ன ராஜா
ஷாப்பிங் போனபோது கோஹ்லி பையைத் தூக்கியபடி தன் பின்னாலேயே வந்ததை குறையாகக் கூறவில்லை அனுஷ்கா. மாறாக, தான் எங்கு கிளம்பினாலும், கிளம்புவதற்கு ரொம்ப நேரம் எடுத்துக் கொள்வதையும், தான் கிளம்பும் வரை கோஹ்லி பொறுமையுடன் காத்திருப்பதையும்தான் கோஹ்லியின் குறையாக கூறினார் சிரித்தபடி.
இதுல புதுசா என்னத்தா இருக்கு.. எல்லா காதலரும், கணவரும் இப்படித்தானே காத்துக் கிடக்கிறார்கள் உலகம் பூராவும்.. இதுக்கெல்லாம் கோச்சுக்கிட்டா காரியம் நடக்குமா...!
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications