மகளிர் தினத்தன்று பெண்களிடம் மன்னிப்பு கேட்ட கோஹ்லி: எதற்கு தெரியுமா?
மும்பை: சர்வதேச மகளிர் தினத்தன்று கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி பெண்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.
இன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என பலரும் பெண்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். பல்வேறு அலுவலகங்களில் மகளிர் தினத்தை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றது.
Sorry for the jerks, the cat-callers, the stalkers. Don't let them ruin it for the rest of us. Happy Women's Day 😇😇 pic.twitter.com/dZPbmwSymA
— Virat Kohli (@imVkohli) March 8, 2016
ஏராளமானோர் ட்விட்டர் மூலம் பெண்களுக்கு மகளிர் தின வாழ்த்து தெரிவித்துள்ளபோதிலும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லியின் ட்வீட்.
அப்படி என்ன கோஹ்லி ட்வீட் செய்துவிட்டார் என்று நினைக்கிறீர்களா. இது தான் அவர் செய்த ட்வீட்,
பின்தொடர்ந்து தொல்லை கொடுப்பவர்கள், விசில் அடிப்பவர்கள், முட்டாள்களுக்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இனிய மகளிர் தின வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications