பழங்குடியினத்தை சேர்ந்தவர்.. சத்தீஸ்கர் முதல்வராகும் விஷ்ணு தியோ சாய் யார் தெரியுமா? முழு பின்னணி
ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநில பாஜகவின் புதிய முதல்வராக பழங்குடியினத்தை சேர்ந்த விஷ்ணு தியோ சாய் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு நெருக்கமான இவர் யார்? எப்படி முதல்வர் பதவியை எட்டிப்பிடித்தார் என்பது பற்றிய முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த மாதம் மிசோரம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், தெலுங்கானா என 5 மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் பதிவான ஓட்டுகள் டிசம்பர் 3ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வந்த நிலையில் இந்த தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது. அதாவது மொத்தமுள்ள 90 சட்டசபை தொகுதிகளில் 54 இடங்களில் பாஜக வெற்றி பெற்றது. இங்கு 45 ஒரு கட்சி தனித்து ஆட்சியை பிடிக்க 46 இடங்கள் தேவை என்ற நிலையியில் பாஜக கூடுதல் இடங்களை வென்று அசத்தியது.
மாறாக காங்கிரஸ் கட்சி இந்த தேர்தலில் பெரிய அளவில் சறுக்கலை சந்தித்து பாஜகவிடம் ஆட்சியை பறிகொடுத்தது.
காங்கிரஸ் கட்சி 35 இடங்களில் மட்டும் வென்றது. கடந்த 2018 தேர்தலை ஒப்பிடும்போது 33 தொகுதிகளை காங்கிரஸ் பறிகொடுத்து பரிதாப நிலைக்கு சென்றது. இதன்மூலம் சத்தீஸ்கரில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தான் பாஜகவில் புதிய முதல்வர் யார்? என்பது பற்றிய கேள்வி எழுந்தது. இந்நிலையில் தான் இன்று ராய்ப்பூரில் பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் புதிய முதல்வர் தேர்வு செய்வதாக அறிவிக்கப்பட்டது. முதல்வர் பதவிக்கு பாஜகவின் ராமன் சிங், ராம்விச்சார் நேதம், சரோஜ் பாண்டே, அருண் சாவ், ஓ.பி.சௌத்ரி, மற்றும் விஷ்ணு தியோ சாய் ஆகியோரின் பெயர்கள் முன்னிலையில் இருந்தன.
சத்தீஸ்கரின் முதல்வராக விஷ்ணு தியோ சாய் தேர்வு.. பாஜக மேலிடம் அறிவிப்பு.. யார் இவர் தெரியுமா?
இந்நிலையில் தான் விஷ்ணு தியோ சாய் முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை பாஜக மேலிடம் வெளியிட்டுள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தை பொறுத்தமட்டில் விஷ்ணு தியோ சாய் பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவர். பழங்குடியினத்தை சேர்ந்த இவருக்கு வயது 59.
இவர் கடந்த 1990, 1993 ஆண்டுகளில் தாப்காரா சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏவாக செயல்பட்டார். அதன்பிறகு 1999, 2004, 2009, 2014 ஆகிய ஆண்டுகளில் ராய்கார் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு தொடர்ந்து வெற்றி பெற்று எம்பியாக இருந்தார்.
இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடியின் அமைச்சரவையில் எஃகு, கனிமம் தொழிலாளர் மற்று வேலைவாய்ப்பு துறைன் இணை அமைச்சராக செயல்பட்டார். அதன்பிறகு 2020 முதல் 2022ம் ஆண்டு வரை சத்தீஸ்கர் மாநில பாஜக தலைவராக செயல்பட்டார். இவர் தலைமையில் பாஜக வளர்ச்சி பெற்றது.
இத்தகைய சூழலில் தான் இந்த சட்டசபை தேர்தலில் அவர் குங்குரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போத அவர் முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். விஷ்ணு தியோ சாய் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா உள்ளிட்டோருக்கு நெருக்கமானவர் என கூறப்படுகிறது. இத்தகைய சூழலில் தான் எம்எல்ஏக்கள் அவரை முதல்வராக தேர்வு செய்துள்ளனர்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications