For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

2012, 2017 குஜராத் தேர்தல்.. அலேக்காக லாபம் பார்த்த கட்சி எது தெரியுமா?

குஜராத் மாநிலத்தில் கடந்த சட்டசபை தேர்தலை காட்டிலும் இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு வாக்கு வங்கி சற்று அதிகரித்துள்ளது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

காந்திநகர்: குஜராத் மாநிலத்தில் கடந்த சட்டசபை தேர்தலை முடிவுகளை பார்க்கும்போது காங்கிரஸ் கட்சியின் வாக்கு வங்கி அதிகரித்துள்ளதைக் காண முடியும்.

குஜராத் மாநிலத்தில் 182 சட்டசபை தொகுதிகளுக்கு கடந்த வாரம் இரு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது.

இதில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. அதேசமயம், காங்கிரஸ் கட்சி 70 இடங்களுக்கு மேல் பிடித்துள்ளது. பாஜக குஜராத்தில் ஆட்சியை தக்க வைத்துள்ள போதிலும் கடந்த முறையை விட கம்மியான இடங்களையே அது பெற்றுள்ளது.

வாக்கு வங்கி அதிகரித்துள்ளது

வாக்கு வங்கி அதிகரித்துள்ளது

மாறாக, இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்துள்ளது என்றாலும் கூட அதன் வாக்கு வங்கி நன்றாகவே அதிகரித்துள்ளது. இது காங்கிரஸுக்கு பெரும் தெம்பு தரும் விஷயமாகும்.

2012 நிலவரம்

2012 நிலவரம்

இன்றைய தேர்தல் முடிவுகளை கடந்த 2012-ஆம் ஆண்டு தேர்தல் முடிவுகளுடன் ஒப்பிட்டு பார்க்கையில், பாஜகவுக்கு கடந்த 2012 தேர்தலில் 1,31,33,057 வாக்குகள் கிடைத்தன. காங்கிரஸ் கட்சிக்கு 1,06,65,468 பேரும் வாக்களித்துள்ளனர். இரு கட்சிகளுக்கிடையேயான வித்தியாசம் 24,67 589 வாக்குகள் ஆகும்.

பாஜகவுக்கு சீட் கம்மி.. வாக்கு அதிகம்

பாஜகவுக்கு சீட் கம்மி.. வாக்கு அதிகம்

இந்த ஆண்டு சட்டசபை தேர்தலில் இதுவரை கணக்கிடப்பட்ட வாக்குகளின்படி பாஜகவுக்கு 1,36,47,813 பேரும், காங்கிரஸ் கட்சிக்கு 1,15,40,514 பேரும் வாக்களித்துள்ளனர். இரு கட்சிகளுக்கிடையேயான வித்தியாசம் 21,07,299 வாக்குகள் ஆகும்.

பாஜகவை விட காங்.குக்கே லாபம்

பாஜகவை விட காங்.குக்கே லாபம்

இதை கூர்ந்து கவனித்தோமேயானால் பாஜகவுக்கு உயர்ந்துள்ள வாக்கு வங்கியை போல் காங்கிரஸ் கட்சிக்கும் உயர்ந்துள்ளது என்பது கண்கூடாக தெரிகிறது. அதேசமயம், லாபம் என்று பார்த்தால் அது காங்கிரஸுக்குத்தான். சீட் அதிகரித்துள்ளது. ஆனால் பாஜகவுக்கு சீட் குறைந்து விட்டது.

English summary
Here are the comparison of the parties which shares the vote in both 2012 and 2017 assembly elections of Gujarat.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X