For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஒருவழியாக சிம்லாவில் தீர்ந்தது தண்ணீர் பிரச்சினை.. சுற்றுலா பயணிகளை அழைக்கும் ஹோட்டல்கள்

தன்ணீர் பிரச்சனை முடிந்துவிட்டது. சுற்றுலாப் பயணிகள் சிம்லாவுக்கு வரவேண்டும் என ஹோட்டல் முதலாளிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.

Google Oneindia Tamil News

Recommended Video

    சுற்றுலா பயணிகளை அழைக்கும் சிம்லா-வீடியோ

    சிம்லா: சிம்லாவில் தண்ணீர் பஞ்சம் முடிந்துவிட்டது. சிம்லாவில் நிலவும் ரம்மியமான பருவநிலையைக் கண்டு ரசிக்க சுற்றுலாப் பயணிகள் சிம்லாவுக்கு வரவேண்டும் என ஹோட்டல் முதலாளிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.

    கடந்த மே மாதம் சிம்லா மற்றும் சண்டிகர் விமான நிலையங்கள் பராமரிப்பு பணிக்காக மூடப்பட்டது. இதைப்பற்றி, சிம்லாவில் கடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது என எதிர்மறையான செய்தி பரவியது. இதனால், சிம்லாவில் சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்தது. இதன் காரணமாக சிம்லாவில் சுற்றுலா பயணிகளின் மூலம் கிடைக்கும் வருமானத்தை நம்பியுள்ள டாக்ஸி ஓட்டுநர்கள், ரெஸ்டாரண்ட்டுகள், ஹோட்டல்கள் உள்ளிட்டவை கடுமையாக பாதிக்கப்பட்டன.

    Water crisis over, Hoteliers invites tourists to Shimla

    இந்நிலையில், வட இந்திய ஹோட்டல் ரெஸ்டாரண்ட் சங்கத்தினர் செய்தியாளர்களைச் சந்தித்து, சிம்லாவில் தண்ணீர் பிரச்சனை முடிந்துவிட்டது, இப்போது சிம்லாவில் நிலவும் ரம்மியமான சூழலைக் கான காண சுற்றுலாப் பயணிகள் சிம்லாவுக்கு வர வேண்டும் என ஊடகங்கள் மூலம் திங்கள் கிழமை அழைப்பு விடுத்தனர்.

    இந்நிலையில், வட இந்திய ஹோட்டல் ரெஸ்டாரண்ட் சங்கத்தினர் செய்தியாளர்களைச் சந்தித்து, சிம்லாவில் தண்ணீர் பிரச்சனை முடிந்துவிட்டது, இப்போது சிம்லாவில் நிலவும் ரம்மியமான சூழலைக் காண சுற்றுலாப் பயணிகள் சிம்லாவுக்கு வர வேண்டும் என ஊடகங்கள் மூலம் திங்கள் கிழமை அழைப்பு விடுத்தனர்.

    சிம்லாவில் நிலவிய தண்ணீர் தட்டுப்பாடு பிரச்சனையில் முதலமைச்சர் ஜெய் ராம் தாக்கூர் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதி சஞ்சய் கரோல் நேரடியாக தலையிட்டு தண்ணீர் விநியோகத்தை சீர்படுத்தி அனைவருக்கும் தண்ணீர் கிடைப்பதை உறுதி செய்தனர். சிம்லா மாநகராட்சி அட்டவணைப் போட்டு தண்ணீரை விநியோகம் செய்து வருகிறது. அதன்படி, ஒரு நாளைக்கு 42 மில்லின் லிட்டர் தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது. இது சிம்லாவின் மக்கள் தொகைக்கு போதுமானது. மேலும், அவர்கள் நகரங்களைப் பற்றிய தவறான எண்ணங்களை அகற்ற வேண்டும் என்றும் டெல்லி, மும்பை நகரங்களைப் போல சிம்லாவும் தண்ணீர் பற்றாக்குறையை சந்தித்துள்ளது என்று விளக்கம் அளித்தனர்.

    வட இந்திய ஹோட்டல் ரெஸ்டாரண்ட் சங்கத்தின் உறுப்பினர் அனில் வாலியா கூறுகையில், "சிம்லாவில் தண்ணீர் பிரச்சனை இருந்தாலும், சிம்லாவுக்கு வந்த சுற்றுலாப் பயணிகளிடம் நாங்கள் அவர்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை இல்லை என்ற உணர்வையே ஏற்படுத்தினோம்" என்று தெரிவித்தார்.

    சுற்றுலாப் பயணிகளின் வருகையை மீண்டும் அதிகரிப்பதற்கு, ஹோட்டல் முதலாளிகள், நகரத்தில் சுற்றுலாப் பயணிகளுக்கு கோடையில் நிறைய சலுகைகளை அளிக்கிறோம் என்று கூறிய அனில் வாலியா, "ஹோட்டல் முதலாளிகள் தண்ணீர் வரி, மின்சார கட்டணம், குப்பைகளை துப்புறவு செய்வதற்கான கட்டணங்களை செலுத்துவதில் பிரச்சனைகள் இருக்கிறது என கண்டறிந்துள்ளோம்" என கூறினார்.

    இந்த தண்ணீர் பிரச்சனையால், சிம்லாவில் டாக்ஸி ஓட்டுநர்கள், குதிரை வண்டிக்காரர்கள், போட்டோகிராஃபர்கள், சலவைத்தொழிலாளிகள், கடைக்காரர்கள், பத்திரிகை விற்பனையாளர்கள், கைவினைத் தொழில்கள் என பெரிய அளவில் நஷ்டத்தை சந்தித்து பாதிக்கப்பட்டுள்ளனர்.

    கார்ப்பரேஷனில் தண்ணீர் வரி செலுத்தாதவர்கள் மீதும், சிம்லா நகரத்தில் அனுமதி இல்லாமல சட்டவிரோதமாக பிரெட் பிரேக்ஃபாஸ்ட் தயாரிப்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வட இந்திய ஹோட்டல் மற்றும் ரெஸ்டாரன் உரிமையாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

    சுற்றுலாப் பயணிகளை வீடுகளில் தங்க வைப்பது போன்ற தொழில் கிராமப்புறங்களுக்கு மட்டுமே பொருந்தும். ஆனால், அவை நகர்புறத்திலும் செயல்பட்டு வருகின்றன. அதனால், இது போல வீடுகளில் இயக்கப்படும் பயணிகள் தங்குமிடங்களை சுற்றுலாத்துறை மூட வேண்டும் என்றும் வட இந்திய ஹோட்டல் மற்றும் ரெஸ்டாரன்ட் உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

    English summary
    Hoterliers invite tourist to Shimla, Water crisis over, please come to visit pleasant climate of Shimla said Hoterliers and Restaurants Association of North India.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X