நீங்க மட்டும் மேடையில் இன்ஷா அல்லான்னு வழிபடலாம்-ஜெய்ஶ்ரீராம் சொல்ல கூடாதா? மமதா மீது பாஜக பாய்ச்சல்
கொல்கத்தா: தேர்தல் பிரசார மேடையில் இன்ஷா அல்லா என மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி பிரார்த்தனை செய்யும் வீடியோவை அம்மாநில பாஜகவினர் வெளியிட்டு சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகின்றனர்.
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125-வது பிறந்த நாள் நிகழ்ச்சி அண்மையில் கொல்கத்தாவில் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி, மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சியில் மமதா பானர்ஜி பேச முயன்றபோது, ஜெய் ஶ்ரீராம் என முழக்கங்கள் எழுப்பப்பட்டது. இதற்கு ஆட்சேபனை தெரிவித்த மமதா பானர்ஜி, பேச மறுத்து உட்கார்ந்து விட்டார். இது சர்ச்சைக்குரிய விவாதமாக விஸ்வரூபம் எடுத்தது.
தற்போது பொதுமேடையில் மமதா பானர்ஜி, இன்ஷா அல்லா என பிரார்த்தனை செய்யும் ஒரு வீடியோவை மேற்கு வங்க பாஜகவினர் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்படுகிறது.
If CM Mamata Banerjee can recite an Islamic prayer at a West Bengal government event, why does she have a problem being greeted with Jai Shree Ram?
— BJP Bengal (@BJP4Bengal) January 24, 2021
Appeasement?
She disgraced Bengal and insulted Netaji’s legacy by her conduct at the event to commemorate Netaji’s anniversary. pic.twitter.com/OpQ7MR60m2
மேலும் நீங்கள் மட்டும் பொதுமேடையில் இப்படி வழிபாடு நடத்தும் போது ஏன் ஜெய்ஶ்ரீராம் முழக்கங்களை நாங்கள் எழுப்பக் கூடாது என்றும் பாஜகவினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
-
சென்னை திரும்பிய அண்ணாமலை.. விமான நிலையத்தில் திரண்டு வந்து ஆதரவாளர்கள் கொடுத்த ‘மாஸ்’ வரவேற்பு! -
பாஜகவில் இருந்து விலகிய கரு நாகராஜன்.. அண்ணாமலை தொடங்கிய இயக்கத்தில் இணைந்தார்! -
அப்துல்கலாம் பெயரில் அரசியல் பயிற்சி மையம்.. முதலில் பயிற்சி.. அப்புறம் பதவி.. அறிவித்த அண்ணாமலை! -
எக்ஸாம்ல பாஸ் பண்ணுங்க.. பதவியை அள்ளுங்க! அண்ணாமலையின் அடடே ப்ளான்! இது லிஸ்ட்லயே இல்லையே! -
பாஜக மட்டுமில்லை.. அண்ணாமலையால் தவெக - திமுக - அதிமுக - நாம் தமிழருக்கு விழும் பெரிய அடி -
Annamalai: பாஜகவில் இருந்து விலகி தனிக்கட்சி ஆரம்பித்தவர்கள்.. அரசியலில் ஜொலித்தார்களா? சறுக்கினரா? -
பாஜகவில் இருந்து விலகிய பெண் பிரபலம்! கை - தலையில் கட்டு போட்டு.. சிரிச்சே ஃபேமஸானாரே! அவரே தான்! -
CJP Protest LIVE: கரப்பான் பூச்சி கட்சி போராட்டத்தில்.. இணைந்த இடதுசாரி மாணவர் அமைப்புகள்! -
அண்ணாமலை புதிய அரசியல் இயக்கம் அறிவிப்பு.. அடுத்த பொதுத்தேர்தலில் போட்டியிட போவதாகவும் அதிரடி -
பாஜகவுக்கு ‘குட்பை'.. அண்ணாமலைக்காக ரெடியான ராஜ்யசபா சீட் இப்போ யாருக்கு பாருங்க! -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
பாஜகவின் பிளான் 'பி'.. அண்ணாமலை பின்னால் ஆர்எஸ்எஸ்! மாணிக்கம் தாகூர் வார்னிங்!












Click it and Unblock the Notifications