For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கொரோனா முடிஞ்சது! எதுக்கு லாக்டவுன்?தேர்தல் பேரணி நடத்துங்க.. சொல்வது மே.வ. பாஜக தலைவர் திலீப் கோஷ்

Google Oneindia Tamil News

கொல்கத்தா: கொரோனா தொற்று நோய் பரவல் காலம் முடிந்துவிட்டது.. லாக்டவுனை தேவை இல்லாமல் மேற்கு வங்க அரசாங்கம் அமல்படுத்தி உள்ளது; பாஜகவின் மாநிலம் முழுவதும் தேர்தல் பேரணிகளை நடத்த வேண்டும் என்று மேற்கு வங்க பாரதிய ஜனதா கட்சித் தலைவர் திலீப் கோஷ் பேசியிருப்பது சர்ச்சையாகி இருக்கிறது.

உலக நாடுகளிலேயே நாள்தோறும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகம் உள்ள நாடு இந்தியாதான். இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 96,551 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 45 லட்சத்தை தாண்டிவிட்டது.

கோமியத்தை குடித்தால் வைரஸை எதிர்க்கும் சக்தி கிடைக்கும்.. சொல்வது மே.வங்க பாஜக தலைவர்கோமியத்தை குடித்தால் வைரஸை எதிர்க்கும் சக்தி கிடைக்கும்.. சொல்வது மே.வங்க பாஜக தலைவர்

கொரோனா இல்லையாம்

கொரோனா இல்லையாம்

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 1,209 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா பாதிப்பில் 7-வது இடத்தில் மேற்கு வங்கம் உள்ளது. இந்த நிலையில்தான் கொரோனா முற்றிலும் ஒழிந்துவிட்டது என்று மேற்கு வங்க மாநில பாஜக தலைவர் திலீப் கோஷ் பேசியுள்ளார்.

பாஜக கூட்டத்தால் பெருமிதம்

பாஜக கூட்டத்தால் பெருமிதம்

மேற்கு வங்கத்தின் ஹூக்ளியில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய திலீப் கோஷ், முதல்வர் மமதா பானர்ஜிக்கும் அவரது சகோதரர்களுக்கும் இப்போது உடல்நலம் இல்லாமல் போயிருக்கும். அதுக்கு கொரோனா காரணமாக இருக்காது.. பாஜகவினர் பெருந்திரளாக கூடியிருப்பதால்தான் அவர்களுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டிருக்கும்.

லாக்டவுன் தேவை இல்லை

லாக்டவுன் தேவை இல்லை

கொரோனா எல்லாம் முடிந்துவிட்டது. மேற்கு வங்கத்தில் முதல்வர் மமதா பானர்ஜி தேவையில்லாமல் லாக்டவுனை அமல்படுத்தி உள்ளார். இந்த லாக்டவுன் அமலில் இருப்பதால் பாஜகவால் பொதுக்கூட்டங்கள், பேரணிகளை நடத்த முடியாமல் போகிறது. இனி நாமாகவே தேர்தல் பேரணிகளை நடத்த வேண்டியதுதான். இவ்வாறு திலீப் கோஷ் கூறினார்

கோமியமும் கொரோனாவும்

கோமியமும் கொரோனாவும்

கொரோனா லாக்டவுன் காலத்தில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியவர் திலீப் கோஷ். பசுவின் கோமியத்தை குடித்தாலே கொரோனா சரியாகிவிடும் என கூறியவரும் இவர்தான். கோமியத்தை குடிப்பதன் மூலம் கொரோனாவை எதிர்க்கிற சக்தி கிடைக்கும்; இது எல்லாம் கழுதைகளுக்கு தெரியுமா? என பேசி சர்ச்சையில் சிக்கியிருந்தார் திலீப் கோஷ். மேலும் அடுத்த ஆண்டு மேற்கு வங்க சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

English summary
West Bengal BJP President Dilip Ghosh said that the coronavirus pandemic is over.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X