மத்திய அரசு பணியில் சேரவில்லை- மே.வங்க தலைமை செயலாளர் ஆலாபனுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்!
கொல்கத்தா: மத்திய அரசு பணியில் இன்று சேராத மேற்கு வங்க தலைமை செயலாளர் ஆலாபன் பந்தோபத்யாயாவுக்கு (அலாபன் பந்தோபாத்யாய்) விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
மேற்கு வங்கத்தின் தலைமை செயலாளரான ஆலன் பந்தோபத்யா இன்றுடன் பணி ஓய்வு பெற்றார். அவருக்கு மேலும் 3 மாதங்கள் பணி நீட்டிப்பு வழங்க அனுமதி கோரியிருந்தார் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி.

மோடி வருகை- மமதா காத்திருக்க வைப்பு
இந்நிலையில் மேற்கு வங்கத்தை தாக்கிய யாஸ் புயல் தொடர்பான ஆய்வு கூட்டத்துக்கு பிரதமர் மோடி சென்றிருந்தார். இருந்த போதும் தலைமை செயலாளருடன் சென்று மோடியை சந்தித்து புயல் சேத விவரங்கள் தொடர்பான அறிக்கையை மமதா கொடுத்திருந்தார். ஆனால் பிரதமர் மோடியை முதல்வர் மமதா பானர்ஜி காத்திருக்க வைத்துவிட்டதாக சர்ச்சை எழுந்தது.

தலைமை செயலாளர் விடுவிப்பு
அத்துடன் மேற்கு வங்க தலைமை செயலாளர் ஆலாபன் பந்தோபத்யாய், அப்பணியில் இருந்து விடுவிக்கப்படுவதாகவும் டெல்லியில் இன்று உள்துறை அமைச்சகத்தில் ஆஜராகவும் மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. மத்திய அரசின் இந்த உத்தரவை முதல்வர் மமதா பானர்ஜி ஏற்கவில்லை. இதனை திரும்பப் பெற கோரி மத்திய அரசுக்கு அவர் கடிதம் அனுப்பினார். மேலும் ஆலாபன் பந்தோபத்யாயை தற்போதைய இக்கட்டான சூழலில் தலைமை செயலாளர் பதவியில் இருந்து விடுவிக்க இயலாது; மத்திய அரசின் ஒரு தலைபட்சமான உத்தரவு அதிர்ச்சி அளிக்கிறது என்றும் மமதா அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

கொல்கத்தாவில் ஆலோசனை
இந்நிலையில் கொல்கத்தாவில் தலைமை செயலகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், புயல் மீட்பு பணிகள் ஆகியவை தொடர்பாக அடுத்தடுத்து ஆலோசனை கூட்டங்கள் இன்று நடைபெற்றன. இந்த ஆலோசனை கூட்டங்களில் தலைமை செயலாளர் ஆலாபன் பந்தோபத்யாய் பங்கேற்றார்.

டெல்லியில் ஆஜர் இல்லை?
ஆகையால் இன்று டெல்லி உள்துறை அமைச்சகத்தில் ஆலன் பந்தோபத்யாய் ஆஜராகவில்லை. இதனையடுத்து ஆலாபனுக்கு விளக்கம் கேட்டு மத்திய அரசு இன்று நோட்டீஸ் அனுப்பி உள்ளது.












Click it and Unblock the Notifications