அம்மாடி உள்ள இவ்வளவு இருக்கா?.. தல தோனியின் பிரம்மாண்ட பண்ணை வீடு!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் பண்ணை வீடுதான் உலகில் கிரிக்கெட் வீரர் ஒருவர் வைத்திருக்கும் பெரிய பண்ணை வீடு என்று கூறப்படுகிறது.
ராஞ்சி: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் பண்ணை வீடுதான் உலகில் கிரிக்கெட் வீரர் ஒருவர் வைத்திருக்கும் பெரிய பண்ணை வீடு என்று கூறப்படுகிறது.
இந்திய கிரிக்கெட் வீரர்களில் மிகவும் பணக்கார வீரர்கள் என்றால் கோலி, சச்சின், யுவராஜ் என்று எளிதாக கூறிவிடலாம். அதற்கு கொஞ்சமும் சளைத்தவர் இல்லை தோனி.
இந்திய அணியில் இருந்து வரும் பிசிசிஐ சம்பளம் மட்டுமில்லாமல் ஐபிஎல் சம்பளம், விளம்பர சம்பளம் என்று நிறைய கோடிகளை வருடா வருடம் ஈட்டுகிறார் தல தோனி. இந்த நிலையில்தான் தோனியின் பண்ணை வீடுதான் உலகில் கிரிக்கெட் வீரர் ஒருவர் வைத்திருக்கும் பெரிய பண்ணை வீடு என்று கூறப்படுகிறது.

என்ன சம்பளம்
தோனி வருடத்தில் 1 மில்லியன் டாலர் வரை சம்பளம் பெறுகிறார். இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 7 கோடி வரை சம்பளம் வாங்குகிறார். ஆனால் இவர் கோஹ்லி, ரோஹித்தை விட குறைவான அளவு சம்பளமே வாங்குகிறார். கிரிக்கெட் போட்டி மூலம் மட்டும் அவர் பல கோடி சம்பளம் வாங்கி வருகிறார். இது இல்லாமல் ஐபிஎல், விளம்பரம், கார், பைக் ஒப்பந்தம் என்று பல விதமான வருமானங்களை வாங்கி வருகிறார்.

என்ன வீடு
தோனியின் இன்ஸ்டாகிராம் புகைப்படங்களை பார்த்தவர்கள் பசுமை போர்த்திய அவரது வீட்டையும் பார்த்து இருப்பார்கள். இது ராஞ்சியில் உள்ள அவரது பண்ணை வீடு ஆகும். ராஞ்சி ரிங் ரோட்டில் அந்த வீடு உள்ளது. இதற்கு தோனி கைலாஷ்பதி என்று பெயர் வைத்து இருக்கிறார்.

எத்தனை ஏக்கர்
இந்த வீடு மொத்தம் 8 ஏக்கர் நிலத்தில் கட்டப்பட்டுள்ளது. முழுக்க புல் இருக்கும் படி இந்த வீடு அமைக்கப்பட்டுள்ளது. அதுபோல் இதை கட்டவே 3 வருடம் ஆனதாக கூறப்படுகிறது. ஆனால் இது எத்தனை கோடிக்கு கட்டப்பட்டது என்று முழு விவரம் வெளியாகவில்லை.

என்ன இருக்கிறது
இந்த வீட்டிற்குள் சிறிய கிரிக்கெட் ஸ்டேடியமே இருக்கிறது. பெரிய ஜிம் ஒன்று இருக்கிறது. அதேபோல் பெரிய நீச்சல் குளம் ஒன்று உள்ளது. இதை எல்லாம் உலக தரத்தில் பார்த்து பார்த்து தோனி கட்டி இருப்பதாக கூறுகிறார்கள். ஆனால் இதை எல்லாம் பார்த்தால் வெளியில் இருந்து கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு இவர் வீட்டை வடிவமைத்து இருக்கிறார்கள்.

என்ன சாப்பாடு
அதேபோல் இவரது டயட்டிற்கு ஏற்றப்படி சாப்பாடு செய்யவும் பெரிய கூடம் உள்ளது. இங்கு பைவ் ஸ்டார் ஹோட்டலில் வேலை பார்த்த பணியாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். இந்த சமையல் கூடமே பைவ் ஸ்டார் தரத்தில் இருக்கும் என்று கூறப்படுகிறது.

கார் பைக்
இந்த நிலையில் இந்த வீட்டின் அடியில் கார் பைக் வைக்கவே பெரிய பார்க்கிங் ஏரியா இவர் வைத்துள்ளார். இது மிகவும் பெரிய அளவில் இருக்கும். இவர் கார், பைக் பிரியர் என்பது எல்லோருக்கும் தெரியும். அதோடு, இவர் போட்டிகளில் மேன் ஆப் தி மேட்சாக வாங்கிய பைக் எல்லாம் இங்குதான் வரிசைகட்டி நிற்கிறது.

ஏன் தெரியுமா?
இந்த வீட்டை ஊரில் இருந்து தள்ளி ரிங் ரோட்டில் இவர் கட்டவும் காரணம் உள்ளது. இந்திய அணி போட்டிகளில் தோல்வி அடைந்தால் ரசிகர்கள் கோபமடைந்து தோனியின் வீட்டை தாக்குவது வழக்கம். இதுபோன்ற தாக்குதலில் சிக்காமல் இருக்கவே, தோனி வெளியே சென்று இந்த வீட்டை கட்டியுள்ளதாக கூறப்படுகிறது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications