பக்தர்கள் கூட்டம்+ போலீசார் கட்டுப்பாடு.. மகா கும்பமேளாவில் 30 பேர் உயிரிழக்க உண்மையில் என்ன காரணம்?
பிரயாக்ராஜ்: உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் மகா கும்பமேளா நடந்து வருகிறது. தை அமாவாசையான நேற்று அதிகாலை ஒரே நேரத்தில் பக்தர்கள் பலரும் புனித நீராடச் சென்றனர். அப்போது ஏற்பட்ட குழப்பத்தில் சுமார் 30 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் காயமடைந்தனர். இதற்கிடையே இந்தச் சம்பவம் குறித்து இப்போது சில பகீர் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்துக்களின் மிகப் பெரிய மத ஒன்றுகூடல் நிகழ்ச்சியாக அறியப்படும் மகா கும்பமேளா உத்தரப் பிரதேசம் பிரயாக்ராஜ் நகரில் நடந்து வருகிறது. இது 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் நிகழ்வாகும்.

கடந்த ஜனவரி 13ம் தேதி தொடங்கிய மகா கும்பமேளா பிப்ரவரி 26 வரை நடைபெறுகிறது. எப்போதும் மகா கும்பமேளா நிகழ்வில் பல கோடி பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுவார்கள்.
திடீர் குழப்பம்:
இதற்கிடையே தை அமாவாசையை முன்னிட்டு நேற்று திரிவேணி சங்கமத்தில் புனித நீராடப் பக்தர்கள் அதிகப்படியாகக் குவிந்தனர். இதனால் எதிர்பாராத விதமாகக் கூட்ட நெரிசல் ஏற்பட்ட நிலையில், அதில் 30 பேர் உயிரிழந்தனர். எதிர்பாராத விதமாக நடந்த இந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. மகா கும்பமேளாவில் என்ன நடந்தது என்பது குறித்து சில முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
நேற்று அதிகாலை 1 மணி முதல் 2 மணிக்குள் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. தை அமாவாசை அன்று ஒரே நேரத்தில் பலர் புனித நீராடத் திரண்டர். மகா கும்பமேளாவை முன்னிட்டு 4,000 ஹெக்டேரில் அமைக்கப்பட்டிருந்த 'அகாடா மார்க்கில்', அதாவது சந்நியாசிகளுக்கான அரங்கிற்கு அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது.
உண்மையில் என்ன நடந்தது:
அங்குப் பக்தர்கள் பாதுகாப்பிற்குத் தடுப்புகள் வைக்கப்பட்டிருந்த நிலையில், அதைத் தாண்டி குதிக்க முயன்றபோது நெரிசல் ஏற்பட்டதாக போலீசார் கூறுகிறார்கள். புனித நீராடச் செல்லும் பாதைகள் மூடப்பட்டு இருந்ததாகவும் இதனால் பக்தர்கள் நீண்ட நேரம் ஒரே இடத்தில் நிற்க வேண்டிய சூழல் ஏற்பட்டதாகவும் பக்தர்கள் குறிப்பிடுகிறார்கள்.
கூட்டம் நகராமல் நின்ற நிலையில், பின்னால் இருந்த மக்கள் தள்ள தொடங்கியதாகவும் இதன் காரணமாகவே பக்தர்கள் தடுப்புகளை ஏறிக் குதித்ததாகவும் கூறப்படுகிறது. இது குறித்து பக்தர்கள் கூறுகையில், "பின்னால் இருந்து சிலர் ஆவேசமாகத் தள்ளினார்கள். இதனால் மூச்சுத்திணறலே ஏற்பட்டது. ஒரு பக்கம் பக்தர்கள் என்றால் இன்னொரு பக்கம் போலீசார் தடுப்புகளை வைத்து நகர விடாமல் செய்துவிட்டனர். இந்த குழப்பமே அங்கு ஏற்பட்ட தள்ளு முள்ளுக்குக் காரணம்" என்றார்.
உத்தரப் பிரதேச அரசு கட்டுப்பாடுகள்:
இந்த கூட்ட நெரிசல் காரணமாகக் குறைந்தது 30 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் படுகாயம் அடைந்தனர். உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இழப்பீடாக ரூ.25 லட்சம் வழங்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. மேலும், இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து அங்கு பல்வேறு கட்டுப்பாடுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
கூட்டத்தை நிர்வகிக்கவும் பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் அனைத்து வகையான வாகனங்களும் மகா கும்பமேளா பகுதியில் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், விவிஐபி பாஸ்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கூட்டத்தைச் சரியாக நிர்வகிக்கவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளன.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications