• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  கத்துவா படுகொலையின் முக்கிய குற்றவாளி தாத்தா... என்ன தண்டனை கொடுக்கலாம்?

  By Gajalakshmi
  |
   கத்துவா படுகொலையின் முக்கிய குற்றவாளி சஞ்சிராம் தாத்தா

   ஸ்ரீநகர் : பக்கர்வால் நாடோடி மக்களை கத்துவாவின் ரசானா பகுதியில் இருந்து அகற்றுவதற்காக முன்னாள் வருவாய்த்துறை அதிகாரியான 60 வயது சஞ்சிராமின் புகைப்படம் சமூகவலைதளங்களில் பரவி வருகிறது. இந்த கல்நெஞ்சுக்கார கயவனுக்கு என்ன தண்டனை வழங்கினால் சரியாக இருக்கும்.

   ஜனவரி 10 ஊதா நிறை ஆடையில் தனது குதிரையை மேய்க்கச் சென்றாள் அந்தச் சிறுமி. ஒரே ஒரு அறை கொண்ட அந்த வீட்டின் இளவரசியாக இருந்த அவள், காணாமல் போன தன்னுடைய குதிரை காட்டுப்பகுதியில் இருப்பதாக 19 வயது இளைஞர் சொன்னதைக் கேட்டு அவனுடன் காட்டிற்குள் சென்றுள்ளார்.

   ஆனால் மாலை மங்கியதும் குதிரை வீடு திரும்பியதே தவிர சிறுமி வீடு திரும்பவில்லை. போலீசாரின் தகவல்படி ஒரு நபர் சிறுமியை அந்த கிராமத்தின் கோவிலுக்குள் இழுத்துச் சென்று அவளுக்கு போதைப்பொருள் கொடுத்துள்ளார். இதோடு 3 நாட்கள் அந்த நபரும், வேறு இருவரும் சேர்ந்து சிறுமியை வன்புணர்வு செய்துள்ளனர்.

   கல்லைப் போட்டு கொன்ற போதும் விடவில்லை

   கல்லைப் போட்டு கொன்ற போதும் விடவில்லை

   தொடர்ந்து போதைப்பொருள் மட்டுமே கொடுத்து உணவின்றி சிறுமியை சீரழித்துள்ளனர். சிறுமியை தலையில் கல்லால் அடித்துத் தாக்கியுள்ளனர், அப்போதும் கூட கயவன் ஒருவன் சிறுமி குத்துயிரும் கொலை உயிருமாக கிடந்த போதும் அந்தச் சிறுமியை பலாத்காரம் செய்துள்ளான். கிழிந்த ஆடைகளுடன் கந்தலாகி கசக்கி தூக்கி எறியப்பட்ட அந்தச் சிறுமியின் உடல் ஜனவரி 17ம் தேதி கண்டுபிடிக்கப்பட்டது. சிறுமியின் கொடூரக் கொலை தொடர்பாக நடந்த விசாரணையில் பள்ளிப்படிப்பை பாதியிலேயே விட்டுவிட்ட 19 வயது இளைஞன் சிறுமி தினமும் குதிரை மேய்க்க வருவதை பார்த்துள்ளான்.

   சஞ்சிராம் போட்ட சதித்திட்டம்

   சஞ்சிராம் போட்ட சதித்திட்டம்

   இந்தத் தகவலை இளைஞன் தன்னுடைய உறவினரும் ஓய்வுபெற்ற வருவாய் துறை அதிகாரியும் உள்ளூர் கோவில் பொறுப்பாளருமான சஞ்சிராமிடம் கூறியுள்ளான். அந்த 60 வயது முதியவர் போட்ட திட்டம் தான் சிறுமியை அடைத்து வைத்து சீரழித்து கொன்றது. குற்றத்தை மறைப்பதற்காக காவல்துறையினருக்கு லஞ்சமும் கொடுத்துள்ளார் சஞ்சிராம்.

   இளைஞன் அளித்த வாக்குமூலம்

   இளைஞன் அளித்த வாக்குமூலம்

   எனினும் இளைஞனின் வாக்குமூலத்தின் அடிப்படையிலும் தடயவியல் ஆதாரங்கள் மற்றும் வேறு சில சந்தேகங்களின் அடிப்படையிலும் சஞ்சிராம் கைது செய்யப்பட்டுள்ளார். இதில் கொடுமை என்னவென்றால் சிறுமி இறப்பதற்கு முன்னர் பலாத்காரம் செய்த அந்த நபர் யார் தெரியுமா சிறப்பு காவல் அதிகாரி தீபக் கஜூரியா என்கிறது குற்றப்பத்திரிக்கை.

   படிப்பை விட்டு வந்த தீபக்

   படிப்பை விட்டு வந்த தீபக்

   தீபக் கஜூரியாவின் தொலைபேசி அழைப்புகளை சோதித்து பார்த்த போது சிறுமி அடைத்து வைக்கப்பட்டிருந்த பகுதியில் இவருடைய செல்போன் பதிவுகள் காட்டுகின்றன. இதே போன்று அந்த இளைஞன் கொடுத்துள்ள வாக்குமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 5வது குற்றவாளி அவனுடைய நண்பன் பர்வேஷ் குமார். இவன் சிறுமியை பலமுறை பலாத்காரம் செய்துள்ளான்.

   தந்தை, மகன், பேரனுக்கு தொடர்பு

   தந்தை, மகன், பேரனுக்கு தொடர்பு

   சஞ்சிராமின் மகன் விஷால் ஜங்கோத்ராவும் தடயவியல் சோதனைகள் முடிவின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார். மீரட்டில் படித்துக் கொண்டிருந்த விஷால் கத்துவாவில் சிறுமி அடைக்கப்பட்டிருப்பதாக நண்பன் கொடுத்த தகவலைக் கேட்டு வந்துள்ளான். மற்ற 2 குற்றவாளிகள் காவல்துறையை சேர்ந்தவர்கள் இவர்கள் அதிக பணத்தை லஞ்சமாக பெற்று குற்றத்தை மறைக்க உதவி செய்துள்ளனர்.

   தடயங்களை அழிக்க உதவிய போலீசார்

   தடயங்களை அழிக்க உதவிய போலீசார்

   குற்றப்பத்திரிக்கையில் துணை ஆய்வாளர் ஆனந்த் தத்தா, தலைமை காவலர் திலக் ராஜ் உள்ளிட்டோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. சம்பவம் நடந்த இடத்தில் தடயத்தை சேகரிக்காமல், சிறுமியின் ஆடைகளை அலசி தடயங்களை மறைக்க உதவியதாக இவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

   என்ன தண்டனை கொடுக்கலாம் சஞ்சிராமிற்கு

   என்ன தண்டனை கொடுக்கலாம் சஞ்சிராமிற்கு

   சிறுமியை நயவஞ்சகமாக கடத்திச் சென்று தொடர்ந்து கொடுமைப்படுத்தி அப்போதும் இறக்காமல் மனதைரியத்துடன் இருந்தவளை தலையில் கல்லைப் போட்டுக் கொன்றுள்ளனர். உண்மையில் இந்தச் சிறுமியின் மனதைரியத்தை நினைத்தால் வியப்பாகவே இருக்கிறது. இத்தனை கொடுமைகளைத் தாண்டியும் உயிருடன் இருந்திருக்கிறாள், இந்த உறுதி அந்த சமூக மக்கள் அனைவருக்கும் இருக்கும் என்பதாலேயே அவர்களை அச்சுறுத்துவதற்காக சஞ்சிராம் இந்த சதித்திட்டத்தை போட்டுள்ளான். கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள இவனுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்.

   திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

    
    
    
   English summary
   What will be the suitable punishment for the main accuste 60 years Sanjiram In Kathua Rape And Murder case, as he is only in prison now.

   நாள் முழுவதும் oneindia
   செய்திகளை உடனுக்குடன் பெற

   Notification Settings X
   Time Settings
   Done
   Clear Notification X
   Do you want to clear all the notifications from your inbox?
   Settings X
   We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more