வெளிநாட்டிலும் கவாஸ்கரை துரத்திய 'பார்லே ஜி' பிஸ்கட்.. தங்கை சுவாரசிய தகவல்
மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேனாக திகழ்ந்த சுனில் கவாஸ்கர் 'பார்லே ஜி ' குளுகோஸ் பிஸ்கெட்டை விரும்பி சாப்பிடுவார் என அவரது தங்கை நுதன் மனம் திறந்து பேசினார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேனாக திகழ்ந்த சுனில் கவாஸ்கர் நேற்று தனது 67-வது பிறந்தநாளை கொண்டாடினார். மும்பையில் உள்ள இந்திய கிரிக்கெட் சங்கத்தில் நேற்று நடந்த கவாஸ்கரின் பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பபட்டது.

அப்போது கவாஸ்கரின் தங்கை நுதன் செய்தியாளர்களிடம் கூறுயதாவது: கவாஸ்கருக்கு ‘பார்லே-ஜி' பிஸ்கெட் என்றால் ரொம்பப் பிடிக்கும். டீ அல்லது காபி அருந்தும்போது கட்டாயமாக அந்த பிஸ்கட் இருக்க வேண்டும் என விரும்புவார்.
வெஸ்ட் இண்டீஸ் போன்ற தொலைவான நாடுகளில் நடந்த கிரிக்கெட் போட்டிகளில் அவர் விளையாட சென்றிருந்த வேளைகளில் எல்லாம், கவாஸ்கருக்கு நாங்கள் பார்லே ஜி பிஸ்கெட் கொடுத்து அனுப்புவோம்.
கவாஸ்கர் அந்த நாடுகளில் இருக்கும் போது அங்கு செல்லும் பத்திரிகையாளர்கள் அல்லது குடும்ப நண்பர்கள் யாரிடமாவது, அவருக்கு பிடித்தமான ‘பார்லே-ஜி' குளுக்கோஸ் பிஸ்கட் பாக்கெட்களை மும்பையில் இருந்து கொடுத்து அனுப்புவோம்.

தற்போது அவருக்கு சர்க்கரை நோய் உள்ளதால், இனிப்பான பிஸ்கெட்களை தவிர்க்க கவாஸ்கர் முயற்சி செய்து வருகிறார். ஆனாலும், பார்லே ஜி பிஸ்கெட் என்றால் அவருக்கு இன்னமும் பிடிக்கும் என்று கூறினார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications