அன்ரிசர்வ் பெட்டியில் "சிரித்த" பெண்.. ரயில்வே ஸ்டேஷன் காமுகனை.. பொறி வைத்து தூக்கிய குஜராத் போலீஸ்
காந்திநகர்: ராகுல் என்ற சீரியல் கில்லர், ஒட்டுமொத்த குஜராத் போலீஸாரையும் நடுநடுங்க வைத்துள்ளார்.. குஜராத்தில் 19 வயது இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற குற்றச்சாட்டில், இந்த ராகுல் கைதாகி உள்ளார். அப்போதுதான் அவரது கொடூரமான மறுபக்கம் தெரியவந்துள்ளது.

கடந்த நவம்பர் 14ம் தேதி, குஜராத் உத்வாடா ரயில்வே ஸ்டேஷன் தண்டவாளத்திற்கு பக்கத்தில் 19 வயது இளம்பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்பட்டது.. இந்த பெண் யாரென்று தெரியாததால், அவரை மீட்டு போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பி வைத்தனர்.. தடயவியல் பரிசோதனையில் அந்தப்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
ரயில்வே ஸ்டேஷன்: இதையடுத்து, வல்சாத் மாவட்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை துவங்கினார்கள்.. உத்வாடா ரெயில்வே ஸ்டேஷன் சிசிடிவிகள் ஆராயப்பட்டன. அப்போது பெண்ணின் சடலத்துக்கு பக்கத்தில், அதே மாதிரியான டிரஸ் அணிந்த நபர் ஒருவர், உணவு சாப்பிடுவது வீடியோவில் பதிவாகியிருந்தது.. ஆனால் அந்த நபரும் யார் என்று தெரியவில்லை..
அதனால், அவரது அடையாளத்தை வைத்து தேடும் பணி ஆரம்பமானது.. தேடுதல் குழுக்களும் அமைக்கப்பட்டன. இறுதியில், சம்பந்தப்பட்ட நபர், கடந்த நவம்பர் 24ம் தேதி குஜராத்தின் வாபி ரயில்வே ஸ்டேஷனில் கைது செய்யப்பட்டார்.. அவரது பெயர் ராகுல் கரம்வீர் ஜாட் என்பதும், ஹரியானா மாநிலம் ரோஹ்தக்கை சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது.
ஓட்டல் சம்பளம்: எனவே, இளம்பெண் கொலை தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. சம்பவத்தன்று, வேலை செய்த ஓட்டலில் தன்னுடைய சம்பளத்தை வாங்குவதற்காக வந்தாராம் ராகுல். அப்போதுதான், டியூஷன் முடித்துவிட்டு, வீடு திரும்பிக்கொண்டிருந்த 19 வயது இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றதாகவும், அவரை கொன்றுவிட்டு அதே ரயில்வே ஸ்டேஷனில் உட்கார்ந்து டிபன் சாப்பிட்டதாகவும் வாக்குமூலம் கூறினார்.
அந்த பெண் தன்னுடைய செல்போனை பார்த்து சிரித்துக்கொண்டிருந்தது, தன்னைப் பார்த்து சிரிப்பது போல இருந்ததாம்.. அந்த ஆத்திரத்தில்தான் ராகுல் பலாத்காரம் செய்து கொன்றுவிட்டாராம். அதுமட்டுமல்ல, இதற்கு முன்பு, 5 பேரை கொலை செய்துள்ளதாகவும் கூறி, போலீசாரை அதிர வைத்தார் ராகுல்.. தற்போது கைதாவதற்கு முதல்நாள், அதாவது நவம்பர் 23ம்
தேதி, தெலங்கானா மாநிலம் செகந்திராபாத் ரெயில்வே ஸ்டேஷனிலும், பெண் ஒருவரை கொன்றுள்ளார்.
பாலியல் பலாத்காரம்: கடந்த அக்டோபர் இறுதியிலும், மகாராஷ்டிராவில் சோலாப்பூர் ரெயில் நிலையம் அருகே, மற்றொரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றுள்ளார்.. மேற்கு வங்காளம் ஹவுரா ரெயில் நிலையம் அருகேயும், ஒரு வயதான முதியவரை கொன்றுள்ளார் ராகுல்.. பீடி கேட்டதற்கு அந்த தாத்தா தரவில்லையாம்.. அதனால் கொன்றுவிட்டதாக வாக்குமூலம் தந்துள்ளார்..
கர்நாடகா மாநிலம் முல்கி பகுதியில் ரெயில் பயணி ஒருவரையும் ராகுல் கொலை செய்துள்ளார்.. கடந்த 11 நாட்களில் மட்டும் 5 பேரை கொன்றுள்ளார்.. ராகுலின் அனைத்து கொலைகளும், வெவ்வேறு மாநில ரயில்வே ஸ்டேஷனிலேயே நடந்துள்ளதை கண்டு போலீசார் அதிர்ச்சியில் உள்ளனர்.
ரயில் பயணம்: பெரும்பாலும் ஒரு இடத்தில் இருக்காமல் பயணித்துக் கொண்டே இருப்பதால், ராகுலை பிடிப்பதில் அந்தந்த மாநில போலீசாருக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.. பெரும்பாலும் ரயில்வே பிளாட்பாரத்தில்தான் ராகுல் தூங்குவதால், கிட்டத்தட்ட 2000 சிசிடிவி கேமராக்களை ஆராய்ந்த பிறகுதான், போலீசில் சிக்கியுள்ளார்.
ரெயிலில் மாற்றுத்திறனாளி பெட்டிகளில் பயணிக்கும் பெண்களையே பிரதானமாக குறி வைத்துள்ளார் ராகுல்.. திருட்டு கேஸில் ஏற்கனவே கைதாகி ஜோத்பூர் ஜெயிலில் இருந்துள்ளார்.. சிறையிலிருந்து கடந்த நவம்பர் மாதம்தான் வெளியே வந்துள்ளார்.. ராஜஸ்தான், ஹரியானா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ராகுல் மீது வழக்குகள் உள்ளன.. தற்போது இவர் மீது 13 எப்ஐஆர்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.
விசாரணை ஆரம்பம்: இப்போது ராகுலை 10 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்... இந்த கொலைகள் குறித்து மேல் விசாரணை செய்வதற்காக 2 துணை காவல்துறை கண்காணிப்பாளர்கள் தலைமையில் விசாரணை குழுவும் அமைக்கப்பட்டுள்ளது
ராகுலுக்கு 29 வயதுதான் ஆகிறது.. எப்போதுமே கிரிமினல் செயல்களில் இவர் ஈடுபட்டுவந்ததால், குடும்பத்தினரும் இவரை ஏற்க மறுத்துள்ளனர். படிப்பும் வெறும் 5ம் வகுப்புதானாம்.. அதனால்தான் திருட்டு தொழிலையே நிரந்தரமாக்கி வாழ்ந்து வந்துள்ளார்.
அடையாளம்: ராகுல் 5 வயது குழந்தையாக இருக்கும்போது போலியோவால் பாதிக்கப்பட்டிருக்கிறார். இதனால், இவரது வலது கால் ஊனமுற்றது. அதுமுதல் அவர் மாற்று திறனாளியாக இருக்கிறார். தன்னுடைய மாற்று திறனாளி அடையாளத்தை பயன்படுத்தியே பெண்களிடம் அவர் எளிதாக அணுக முடிந்திருக்கிறது. அவருக்கு உதவ வந்த பெண்களையே பாலியல் பலாத்காரமும் செய்து கொன்றுள்ளார்.
பெண்ணின் டிரஸ்: இந்த வழக்கை பொறுத்தவரை, ராகுலை கைது செய்வதென்பது, போலீசாருக்கு ஆரம்பத்திலிருந்தே பெரும் சவாலாக இருந்து வந்தது.. காரணம், ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு செல்வது மட்டுமல்லாமல், வெகு தொலைவிலுள்ள இடத்தை நோக்கியே தினந்தோறும் பயணித்து வந்துள்ளார் ராகுல்.. இறுதியாக, இளம்பெண்ணை கொலை செய்து, அந்த பெண்ணின் டிரஸ்ஸை ராகுல் அணிந்து கொண்டு, அங்கேயே உட்கார்ந்து டிபன் சாப்பிட்டுள்ளார்..
இதுதான் போலீசுக்கு கிடைத்த முதல் க்ளூவாக இருந்திருக்கிறது. இதற்கு பிறகுதர்ன, 200 போலீசாரை கொண்டு, கிட்டத்தட்ட பல்வேறு மாநிலங்களில் 2000 சிசிடிவி கேமராக்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. சுருக்கமாக சொன்னால், வெறும் சிசிடிவி காட்சிகளை கொண்டு மட்டுமே, இந்த சீரியல் கில்லரை குஜராத் போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications