ரஜினி டூ அஸ்வின் வரை! ராமர் கோவில் விழாவில் இன்று பங்கேற்கும் தமிழக பிரபலங்கள் யார்? இதோ லிஸ்ட்
அயோத்தி: ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் இன்று பிரதமர் மோடி உள்பட 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் பிரபலங்கள் பங்கேற்க உள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் இருந்து விழாவில் பங்கேற்க போகும் பிரபலங்களின் பட்டியல் வெளியாகி உள்ளது.
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் இன்று நடைபெற உள்ளது. பிரான் பிரதிஷ்டை என அழைக்கப்படும் இந்த விழாவில் கருவறையில் நிறுவப்பட்டுள்ள 5 வயது நிரம்பிய குழந்தை பருவ ராமர் சிலைக்கு சக்தி வழங்கும் பூஜை, சடங்குகள் இன்று மேற்கொள்ளப்பட உள்ளது.

இதில் பிரதமர் மோடி தலைமையில் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படுகிறது. இன்று மதியம் 12.15 முதல் 12.45 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. பிரதமர் மோடி ராமர் சிலைக்கு ஆரத்தி உள்ளிட்ட சடங்குகளை செய்ய உள்ளார்.
இந்த விழாவில் பங்கேற்க நாடு முழுவதும் இருந்து பல்வேறு துறை பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மொத்தம் 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் பேர் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் இருந்தும் பல பிரபலங்கள் பங்கேற்க உள்ளனர். நடிகர் ரஜினிகாந்த், நடிகர் தனுஷ், கிரிக்கெட் வீரர் அஸ்வின் உள்பட பலர் பங்கேற்க உள்ளனர்.

காஞ்சி காமகோடி பீடத்தின் சங்கராச்சாரியாரான ஜெயேந்திர சரஸ்வதி நேற்று ராமர் கோவிலுக்கு சென்று பிரதிஷ்டை விழாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் தென்தமிழக ஆர்எஸ்எஸ் தலைவர் ஆடலரசன் தனது மனைவியுடன் பிரதமர் மோடி முன்னிலையில் அயோத்தி ராமர் கோவிலில் இன்று பிரதிஷ்டை சடங்குகளை மேற்கொள்ள உள்ளார்.
இவர்கள் தவிர கிரிக்கெட் வீரர்களை பொறுத்தமட்டில் முன்னாள் வீரர்கள் கபில்தேவ், சுனில் கவாஸ்கர் அனில் கும்ப்ளே, சச்சின் டெண்டுல்கர், சவ்ரவ் கங்குலி, ராகுல் டிராவிட், வீரேந்தர் சேவாக், கவுதம் கம்பீர், எம்எஸ் தோனி உள்ளிட்டோரும், தற்போதைய வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா உள்ளிட்டோரும் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.

நடிகர், நடிகைகளை பொறுத்தமட்டில் அமிதாப் பச்சன், கங்கனா ரணாவத், அக்சய் குமார், ரன்பீர் கபூர், ஆலியா பட், அனுபம் கேர், விராட் கோலி மனைவி அனுஷ்கா சர்மா, ராம் சரண் உள்பட இன்னும் பலர் பங்கேற்க உள்ளனர். இதேபோல் தொழிலதிபர்கள் அம்பானி, அதானி உள்பட ஏராளமானவர்கள் விழாவில் பங்கேற்க உள்ளனர்.












Click it and Unblock the Notifications