For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஒரே கூட்டணியில் 2 பிரதமர் வேட்பாளர்கள் இருக்க முடியாது: அதிமுகவுடன் கூட்டணி இல்லை- பாஜக

By Siva
Google Oneindia Tamil News

டெல்லி: நரேந்திர மோடியை பிரதமராக ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே பாஜக கூட்டணி வைக்கும் என்று பாஜக மூத்த தலைவர் இல. கணேசன் தெரிவித்துள்ளார். அதிமுகவுடன் ஏன் கூட்டணி கிடையாது என்பதற்கான விளக்கத்தையும் அவர் அளித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தின் முக்கிய கட்சிகளான அதிமுக, திமுக ஆகியவற்றுடன் கூட்டணி கிடையாது என்று பாஜக மூத்த தலைவர் இல. கணேசன் இன்று டெல்லியில் தெரிவித்துள்ளார்.

Why does BJP avoid ADMK alliance?: Explains Ila. Ganesan

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் மேலும் கூறுகையில்,

பாஜகவின் பிரதமர் வேட்பாளர் மோடி. அவரை பிரதமராக ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே பாஜக கூட்டணி வைக்கும். திமுகவுடன் பாஜக கூட்டணி வைத்துக்கொள்ள விரும்பவில்லை. ஒரே அணியில் இரண்டு பிரதமர் வேட்பாளர்கள் இருக்க முடியாது. அதனால் தான் அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்கிறோம்.

மேலும் மதிமுகவுடன் கூட்டணி குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமாக பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்றார்.

English summary
Senior BJP leader Ila. Ganesan has explained as to why his party doesn't want to have alliance with ADMK for the forthcoming parliament election in TN.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X