For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஒரே ஒரு ரூம்.. பாழடைந்த வீட்டுக்குள் சந்தனா.. யார் இவர்.. வியக்க வைக்கும் எளிமை.. பாஜகவில் இப்படியா!

குடிசை வீட்டிற்குள் பெண் எம்எல்ஏ சந்தனா வாழ்ந்து வருகிறார்

Google Oneindia Tamil News

கொல்கத்தா: எளிமைக்கு பெயர் போனவர்கள் கம்யூனிஸ்ட்கள்.. அந்த காலம் மட்டுமில்லை, இப்போதுவரை சில கம்யூனிஸ்ட்கள் குடிசைகளில்தான் வாழ்ந்து வருகின்றனர்.. ஆனால், பாஜக எம்எல்ஏ ஒருவர் குடிசைக்குள் வாழ்கிறார் என்றால் நம்ப முடிகிறதா? அவர்தான் எம்எல்ஏ சந்தனா..!

மேற்கு வங்காளத்தின் சால்டோரா தொகுதியின் எம்எல்ஏ தான் சந்தனா பவுரி.. பாஜக சார்பில் நின்று வெற்றி பெற்றவர்.. இப்போது நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளரை விட 4,145 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

விபரீத போதை உயிரை பறித்தது.. போதைக்காக தின்னரில் எலுமிச்சைச்சாறு கலந்து குடித்த பெயிண்டர் உயிரிழப்புவிபரீத போதை உயிரை பறித்தது.. போதைக்காக தின்னரில் எலுமிச்சைச்சாறு கலந்து குடித்த பெயிண்டர் உயிரிழப்பு

இதையடுத்து, மேற்குவங்காளத்தில் நடைபெறும் வன்முறையால் அங்குள்ள பாஜக எம்எல்ஏக்கள் எல்லாருக்கும் மத்திய பாதுகாப்பு படை வழங்கப்பட்டிருக்கிறது.. அந்த வகையில் சந்தனாவுக்கும் பாதுகாப்பு படை தரப்பட்டுள்ளது..

 சிக்கல்

சிக்கல்

இது கட்சியின் முடிவு என்பதால் சந்தனாவும் அதற்கு கட்டுப்பட்டு, பாதுகாப்பு படைக்கு ஓகே சொல்லி இருந்தார்.. ஆனால், இதற்கு மேல்தான் சிக்கலே எழுந்தது.. சந்தனாவே ஒரு குடிசை வீட்டில்தான் தங்கியிருக்கிறார்.. அந்த வீட்டில் ஒரே ஒரு ரூம்தான் இருக்கிறதாம். சந்தனா, அவரது கணவர், 2 குழந்தைகள் என எல்லாருமே இந்த ஒரு ரூமில்தான் தங்கியிருக்கிறார்கள். அதுவும் அந்த வீடு பாழடைந்து போய் இருக்கிறதாம்.

 பாத்ரூம்

பாத்ரூம்

அந்த குடிசையில் குடிக்க தண்ணீர் வசதி இல்லையாம்.. பாத்ரூம் வசதியும் இல்லையாம்.. லாக்டவுன் என்பதால், கூலி தொழிலாளியான கணவருக்கு வேலையும் இல்லையாம்.. இவருக்கு ஒருநாளைக்கு ரூ.400 கூலியாம்.. இப்போது அதுவும் இல்லை என்பதால் வறுமையில் சிக்கி கொண்டுள்ளது சந்தனா குடும்பம்.

 சாப்பாடு

சாப்பாடு

இப்படிப்பட்ட சூழலில் சந்தனா இருக்கும்போது, அவருக்கு பாதுகாப்பு தருவதற்காக 4 மத்திய படை வீரர்கள் அந்த குடிசை வீட்டிற்கு முன்னால் நின்று கொண்டிருக்கிறார்கள்.. சந்தனா குடும்பத்துக்கே சாப்பாட்டுக்கு வழி இல்லாத நிலை ஏற்பட்டுள்ள நிலையில், இந்த 4 பாதுகாப்பு வீரர்களுக்கும் சாப்பாடு போட முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.. அவர்களை தங்க வைக்க முடியாத நிலைமையும் ஏற்பட்டுள்ளது.

 மளிகை கடை

மளிகை கடை

சந்தனாவின் இப்படி ஒரு துயரத்தையும், வறுமையையும் பார்த்த அந்த 4 பாதுகாப்பு வீரர்களுக்கும் பரிதாபமாக போய்விட்டது.. அதனால், சந்தனா குடும்பத்துக்கு சாப்பாடு வாங்கி தந்தார்கள்.. நான்கு மத்திய படை வீரர்களும், தங்களின் சொந்த காசை போட்டு, சந்தனா வீட்டுக்கு மளிகை வாங்கி தந்திருக்கிறார்கள். உள்ளூர் உள்ள மளிகை கடையிலிருந்து காய்கறிகள், பொருட்கள் என வாங்கி வந்து சாப்பாட்டுக்கு உதவி உள்ளனர்..

English summary
Why this BJP MLA Chandana cant afford protection of central forces
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X