ஓடும் ரயிலில் இருந்து மனைவியை கீழே தள்ளி கொலை செய்த கணவர்.. ஆந்திராவில் பரபரப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

விஜயவாடா: ஆந்திராவில் ஓடும் ரயிலில் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டதால் மனைவியை கீழே தள்ளி கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர்.

உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் சந்தோஷ்குமார். இவரது மனைவி கல்பனா குமாரி (வயது 23). இருவரும் சென்னையில் இருந்து டெல்லி செல்லும் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவு பெட்டியில் பயணம் செய்தனர்.

wife was murdered by her husband

ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் கடவகுடுரு கிராமம் வழியாக நேற்று ரயில் வேகமாக சென்று கொண்டு இருந்தது. அப்போது கணவன்-மனைவி இருவருக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டது. ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கிக்கொண்டனர். ஒருகட்டத்தில் ஆத்திரம் அடைந்த சந்தோஷ்குமார், ஓசடும் ரயில் என்றும் பாராமல் கல்பனா குமாரியை ரயிலில் இருந்து கீழே தள்ளி விட்டார்.

இதில் ரயிலின் அடியில் சிக்கிய கல்பனா குமாரி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சக பயணிகள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தோஷ்குமாரை கைது செய்தனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
wife was murdered by her husband from running train in andra
Please Wait while comments are loading...