ஜனாதிபதி சுமித்ரா மகாஜன்.. துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு?
டெல்லி: குடியரசுத் தலைவர் பதவிக்கு லோக்சபா சபாநாயகர் சுமித்ரா மகாஜனை நிறுத்த பாஜக முடிவு செய்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன. அதேபோல துணை குடியரசுத் தலைவர் பதவிக்கு வெங்கையா நாயுடு பெயர் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
மகாராஷ்டிரா வேட்பாளரைப் போட்டால்தான் சிவசேனாவின் ஆதரவைப் பெற முடியும் என்பதால் அவர்களை ஐஸ் வைக்கும் வகையில் இந்த முடிவுக்கு பாஜக வந்துள்ளதாக கூறப்படுகிறது. முன்பும் கூட சிவசேனா கட்சியினர் பிரதீபா பாட்டிலுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
சுமித்ரா மகாஜன் வெளிநாடு செல்லத் திட்டமிட்டிருந்தார். அவரை பயணத்தை ரத்து செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளனராம். அவரும் தனது பயணத்தை ரத்து செய்து விட்டுக் காத்திருக்கிறாராம்.

துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா
அதேபோல துணைக் குடியரசுத் தலைவர் பதவிக்கு வெங்கையா நாயுடு இறுதி செய்யப்பட்டுள்ளாராம். தற்போது அமைச்சராக இருக்கிறார் வெங்கையா. இதற்குப் பல காரணங்களைச் சொல்கிறார்கள்.

ராஜ்யசபாவில் எதிர்ப்புகளை சமாளிக்க
துணைக் குடியரசுத் தலைவர்தான் ராஜ்யசபா தலைவராகவும் இருப்பார். ராஜ்யசபாவில் மட்டும்தான் பாஜக இன்னும் பெரும்பான்மை பலத்தைப் பெறாமல் உள்ளது. எனவே வெங்கையா நாயுடு ராஜ்யசபா தலைவரானால், பாஜகவுக்கு சற்று தெம்பாகவும், பலமாகவும் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அப்போ திரவுபதி கதி?
முன்னதாக ஜார்க்கண்ட் ஆளுநர் திரவுபதி முர்முவின் பெயர் குடியரசுத் தலைவர் பதவிக்குப் பரிசீலிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகின. அவரது பெயரையும் நீக்கவில்லை. தொடர்ந்து பரிசீலித்து வருவதாக பாஜக வட்டாரத் தகவல் தெரிவிக்கிறது.

ஜூலையில் தேர்தல்
குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தல் ஜூலை மாதம் நடைபெறும். அதற்கு அடுத்த ஒரு மாதத்தில் துணைக் குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெறும்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications