"லோகத்துலேயே" ரொம்ப பெரிய்ய்ய கட்சியாமே பா.ஜ.க.... 8 கோடி பேர் உறுப்பினராம்!
டெல்லி: உலகிலேயே மிகப் பெரிய கட்சி என்ற பெருமை பாரதிய ஜனதாவுக்கு கிடைத்துவிட்டதாம். அக்கட்சியில் 8 கோடி பேர் உறுப்பினர்களாக இணைந்து சீன கம்யூனிஸ்ட் கட்சியை முந்திவிட்டதாம்.
பாரதிய ஜனதா கட்சியை உலகிலேயே மிகப்பெரிய கட்சியாக மாற்ற வேண்டும் என்று அதன் தேசிய தலைவர் அமித்ஷா திட்டமிட்டிருந்தார். இதைத் தொடர்ந்து நாடெங்கும் பாரதிய ஜனதாவுக்கு உறுப்பினர் சேர்க்கும் பணி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கியது.

உறுப்பினர்கள் சேர்க்கையை எளிமைப்படுத்த செல்போன்களில் மிஸ்டுகால் கொடுக்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் லட்சக்கணக்கானவர்கள் பாஜக உறுப்பினர்களாகச் சேர்ந்ததாக அறிவிக்கப்பட்டது.
இதன் காரணமாக தற்போது 8 கோடியே 80 லட்சம் பேர் பாஜகவில் உறுப்பினர்களாக உள்ளதாக கூறப்படுகிறது.
இதுவரை உலகிலேயே மிகப்பெரிய கட்சியாக சீனாவின் கம்யூனிஸ்டு கட்சி இருந்தது. அக் கட்சியில் 8 கோடியே 30 லட்சம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.
அக் கட்சியை பின்னுக்குத் தள்ளி விட்டு 8 கோடியே 80 லட்சம் உறுப்பினர்களுடன் பாரதிய ஜனதா முதல் இடத்துக்கு வந்துள்ளதாம்ன்.
பாரதிய ஜனதா உறுப்பினர் சேர்க்கை நாளையும் முடிவடையும் நிலையில் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 10 கோடியாக உயர்ந்து விடும் என்று கூற்பபடுகிறது.
உத்தரபிரதேச மாநிலத்தில் பா.ஜ.க.வுக்கு அதிகபட்சமாக ஒரு கோடியே 50 லட்சம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். குஜராத், மத்திய பிரதேசம் மாநிலங்களில் தலா 80 லட்சம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.
-
அண்ணாமலை தொடங்கும் புதிய கட்சி.. இணையும் பிரபல பிஸ்னஸ் மேன், திமுக மாஜி அமைச்சர்? அவங்களா? -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
ஜப்பானில் பாகிஸ்தான் கட்டிய மசூதி.. இடிக்க அதிரடியாக உத்தரவிட்ட அதிகாரிகள்.. என்ன காரணம்? -
ஒரு சுறா கோபப்பட்டால் உங்களுக்கு இன்டர்நெட் கிடைக்காது.. ஹாட்ஸ்பாட் சென்னை தான் தெரியுமா












Click it and Unblock the Notifications