இந்தியாவிலேயே மிகப் பெரிய பணக்கார நகைக்கடைக்காரர் யாருன்னா.. அது நம்ம கல்யாண ராமன்தான்!

Subscribe to Oneindia Tamil

கொச்சி: கேரளாவைச் சேர்ந்த கல்யாண் ஜுவல்லர்ஸ் நகைக் கடை அதிபர் டி.எஸ்.கல்யாணராமன்தான் இந்தியாவிலேயே மிகப் பெரிய பணக்கார நகைக்கடை அதிபர் என்று வெல்த் எக்ஸ் இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

பாலக்காட்டைச் சேர்ந்த தமிழர்தான் கல்யாண ராமன். இந்தியாவிலேயே மிகப் பெரிய பணக்கார நகைக்கடைக்காரராக இவர் உருவெடுத்துள்ளார்.

இந்தியா முழுவதும் கல்யாண் ஜுவல்லர்ஸ் நிறுவனத்திற்கு கிளைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. கடும் போட்டி நிறைந்த நகைத் தொழிலில் கடுமையான முயற்சிகள், தொடர் விளம்பரங்கள், புதுப் புது உத்திகள் மூலம் உயரத்திற்கு வந்துள்ளது கல்யாண் ஜுவல்லர்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

ரூ. 8265 கோடி

ரூ. 8265 கோடி

கல்யாண் ஜூவல்லர்ஸ் நகை நிறுவனத்தின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 8265 கோடியே 6 லட்சத்து 85 ஆயிரம் என்று கணக்கிடப்பட்டுள்ளது. கல்யாண் ஜூவல்லர்ஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக கல்யாண ராமன் இருக்கிறார்.

மலபார் கோல்டு - பீமா ஜூவல்லர்ஸ்

மலபார் கோல்டு - பீமா ஜூவல்லர்ஸ்

டாப் 10 இடங்களில் மேலும் 2 கேரளாவைச் சேர்ந்தவர்கள் இடம் பிடித்துள்ளனர். மலபார் கோல்டு மற்றும் டயமண்ட் நிறுவன அதிபர் எம்.பி. அகமது, பீமா ஜுவல்லர்ஸ் நிறுவன அதிபர் பி.கோவி்ந்தன் ஆகியோரே அவர்கள்.

83 கிளைகள்

83 கிளைகள்

கல்யாண் ஜுவல்லர்ஸ் நிறுவனர் கல்யாணராமன் இதுகுறித்துக் கூறுகையில், 13 வெளிநாட்டுக் கிளைகள் உள்பட மொத்தம் 83 கிளைகளை வைத்துள்ளோம். 1993ம் ஆண்டு ஜவுளித் துறையில் இருந்து, நகைத் தொழிலுக்கு மாறி்னோம். ரூ. 25 லட்சம் முதலீட்டுடன் இதைத் தொடங்கினோம். இன்று 8000 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு தந்துள்ள அளவுக்கு வளர்ந்துள்ளோம் என்றார்.

2வது இடத்தில் நீரவ் மோடி

2வது இடத்தில் நீரவ் மோடி

2வது மிகப் பெரிய பணக்கார நகைக்கடைக்காரர் என்ற பெயர் நீரவ் மோடிக்குக் கிடைத்துள்ளது. இவர் ஒரு வைர வியாபாரி ஆவார். பயர்ஸ்டார் டயமண்ட்ஸ் என்ற பெயரில் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவரது சொத்து மதிப்பு கிட்டத்தட்ட ரூ. 7000 கோடியாகும்.

3வது இடத்தில் மலபார் கோல்டு அகமது

3வது இடத்தில் மலபார் கோல்டு அகமது

3வது இடத்தில் மலபார் கோல்ட் நிறுவன அதிபர் அகமது உள்ளார். இவரது சொத்து மதிப்பு ரூ. 6357 கோடியாகும். கோழிக்கோட்டைத் தலைமையிடமாகக் கொண்டு மலபார் கோல்ட் நிறுவனம் இயங்குகிறது. ரூ. 70,000 முதலீட்டுடன் நகைத் தொழிலுக்கு வந்தவர் அகமது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிறுவனத்திற்கு இந்தியாவிலும் வெளியிலும் 136 கிளைகள் உள்ளனவாம். 7000 பேர் வேலை பாரா்க்கிறார்களாம்.

4வது இடத்தில் பீமா ஜூவல்லர்ஸ்

4வது இடத்தில் பீமா ஜூவல்லர்ஸ்

பீமா ஜீவல்லர்ஸ் நிறுவன தலைவர் பி.கோவிந்தன் 4வது இடத்தில் உள்ளார். இவரது சொத்து மதிப்பு ரூ. 3941 கோடி ஆகும். இந்த நிறுவனத்திற்கு 40 கிளைகள் உள்ளன. 2500 பேருக்கு வேலைவாய்ப்பு தருகின்றனர்.

இதர

இதர "சேட்டுகள்" விவரம்

இவர்கள் போக கிரண் ஜெம்ஸ் வல்லபாய் படேல், லட்சுமி டயமண்ட் நிறுவனத்தின் வசந்த் கஜேரா, தர்மானந்தன் டயமண்ட்ஸ் நிறுவனத்தின் லால்ஜிபாய் படேல், பாபுபாய் லக்கானி, மாவ்ஜி பாய் படேல், ராஜேஷ் மேத்தா ஆகியோரும் பணக்கார நகைக்கடைக்காரர்கள் வரிசையில் உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+