கட்டிலில் படுத்த திரிணாமுல் எம்எல்ஏ.. மசாஜ் செய்த பஞ்சாயத்து பெண் உறுப்பினர்.. போட்டோவால் சர்ச்சை
மேற்கு வங்காளத்தின் திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ அசித் மஜூம்தாருக்கு, அக்கட்சியின் பஞ்சாயத்து பெண் உறுப்பினர் மசாஜ் செய்தார்.
கொல்கத்தா: மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ அசித் மஜூம்தாருக்கு அக்கட்சியை சேர்ந்த பஞ்சாயத்து பெண் உறுப்பினர் மசாஜ் செய்த போட்டோ வெளியாகி சர்ச்சையை கிளப்பி உள்ளது. உள்ளாட்சி தேர்தல் தொடர்பான பிரசாரத்துக்கு சென்ற எம்எல்ஏ அசித் மஜூம்தாருக்கு மசாஜ் செய்த போட்டோவை அந்த பெண்ணே தனது பேஸ்புக்கில் வெளியிட்ட நிலையில் மேற்கு வங்க அரசியலில் இது புயலாக மாறியுள்ளது.
மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல் அமைச்சராக அக்கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி உள்ளார். இவரது கட்சியை சேர்ந்த எம்எல்ஏ அசித் மஜூம்தார். இவர் சுஞ்சுரா சட்டசபை தொகுதி எம்எல்ஏவாக உள்ளார்.
இந்நிலையில் தான் தற்போது அசித் மஜூம்தார் சர்ச்சையில் சிக்கி உள்ளார். அதாவது திரிணாமுல் கட்சியை சேர்ந்த ஒருவரை மசாஜ் செய்ய வைத்தது தொடர்பான போட்டோ வெளியான நிலையில் அவர் சர்ச்சையில் சிக்கி உள்ளார்.

உள்ளாட்சி தேர்தல் பிரசாரம்
மேற்கு வங்காளத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெற திரிணாமுல் காங்கிரஸ், பாஜக இடையே கடும் போட்டி நிலவுகிறது. இருகட்சியினரும் தற்போதே தீவிர பிரசாரங்களை துவங்கி உள்ளனர். இந்நிலையில் தான் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏவாக உள்ள அசித் மஜூம்தார், ஹூக்ளி மாவட்டத்தில் உள்ள டீபனாந்தபூர் கிராமத்துக்கு பிரசாரத்துக்காக சென்றார்.

மசாஜ் செய்த பெண் உறுப்பினர்
இந்த வேளையில் அவர் அந்த பகுதியில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பியூஷ் தார் என்பவரின் வீட்டுக்கு சென்றிருந்தார். இந்நிலையில் தான் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பஞ்சாயத்து உறுப்பினரான ரூமா ராய் பால், எம்எல்ஏ அசித் மஜூம்தாரின் கால்களுக்கு மசாஜ் செய்துள்ளார். மேலும் கட்டிலில் அசித் மஜூம்தார் சாய்ந்தபடி இருக்க அவரது உள்ளங்கால் மற்றும் கால் விரல்களை ரூமாராய் பால் அழுத்தி விட்டுள்ளார்.

பேஸ்புக்கில் பதிவு
இதுதொடர்பான படங்களை ரூமாராய் பால் தனது போஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார். மேலும், அதில், ‛‛இதற்கு தலைப்பு தேவையில்லை. அவர் என் வழிகாட்டி. அவர் என் கடவுள். அவருக்கு சேவை செய்ய என்றும் நான் நன்றி உணர்வோடு இருக்கிறேன்'' என தெரிவித்து இருந்தார். இதற்கு பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் இந்த போட்டோ இணையதளத்தில் வேகமாக பரவ தொடங்கி மேற்கு வங்க அரசியலில் விவாதத்தை கிளப்பி உள்ளது.

எதிர்க்கட்சியினர் விமர்சனம்
பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கடுமையாக எம்எல்ஏவை விமர்சனம் செய்தனர். திரிணாமூல் காங்கிரஸ் எம்எல்ஏக்களும் தலைவர்களும் கட்சி உறுப்பினர்களை அடிமைகள் போல் நடத்துகிறார்கள் என்று அம்மாநில பாஜகவினர் குற்றம்சாட்டி வருவதோடு, எம்எல்ஏவை கட்சியில் இருந்து நீக்கம் செய்ய வேண்டும் என தொடர்ந்து கூறி வருகின்றனர்.

எம்எல்ஏ மறுப்பு
இது குறித்து எம்எல் ஏ அசித் மஜூம்தார் பாஜகவின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்து இருக்கிறார். இதுபற்றி அவர், ‛‛சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட நிலையில் இன்னும் முழுமையாக மீளவில்லை. இதனால் உதவி செய்தார். தந்தை, சகோதரன் என்ற அடிப்படையில் தான் உதவினார். இதில் தவறு எதுவும் நடக்கவில்லை'' என்றார். அதனை எதிர்க்கட்சியினர் ஏற்றுக்கொள்ளவில்லை. தற்போது இந்த விவகாரம் மேற்கு வங்க அரசியலில் புயலை கிளப்பி வருகிறது.
-
கட்சியையே பறிகொடுக்கும் மம்தா? மே.வங்கத்தில் எதிர்க்கட்சி தலைவரான சஸ்பெண்ட் எம்எல்ஏ! ரிதப்ரதா பானர்ஜி யார்? -
மம்தாவுக்கு மரண அடி.. உடையும் திரிணாமுல் காங்கிரஸ்? தீதீ-ஐ விட்டு செல்லும் 59 எம்எல்ஏக்கள் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
உயர்த்தப்பட்ட மகளிர் உரிமைத்தொகை.. பெண்களுக்கு இனி மாதம் ₹3000 உதவி.. அறிவித்த மேற்கு வங்க அரசு! -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
"எங்களை பாஜக கொல்ல பார்க்கிறது.." வங்கத்தை அதிர வைத்த மம்தாவின் குரல்.. உச்சக்கட்ட பதற்றம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications