For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆண்களே இல்லையா? பெண்களுக்கு சீட் கொடுப்பது இஸ்லாம் மதத்திற்கு எதிரானது..குஜராத் இமாம் சர்ச்சை பேச்சு

Google Oneindia Tamil News

அகமதாபாத்: முஸ்லீம் பெண்களை தேர்தலில் போட்டியிட வைப்பது இஸ்லாம் மதத்திற்கு எதிரானது என்றும் அது மதத்தை பலவீனப்படுத்தும் செயல் எனவும் குஜராத்தை சேர்ந்த இமாம் பேசியிருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

குஜராத்தில் 93 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்ட சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அம்மாநிலத்தை சேர்ந்த இஸ்லாமிய இமாம் பேசியிருக்கும் கருத்து சலசலப்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அகமதாபாத்தில் உள்ள ஜமா மஸ்ஜித்தின் தலைமை இமாம் ஷபீர் அகமது சித்திக் இன்று செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறிய கருத்துதான்.. சலசலப்பையும் அரசியல் ரீதியில் விவாதஙக்ளையும் கிளப்பி விட்டு இருக்கிறது.

31 கூட்டங்களில் பேசிய பிரதமர் மோடி.. இன்றுடன் ஓயும் குஜராத் பிரசாரம்.. டிச.,5ல் ஓட்டுப்பதிவு! 31 கூட்டங்களில் பேசிய பிரதமர் மோடி.. இன்றுடன் ஓயும் குஜராத் பிரசாரம்.. டிச.,5ல் ஓட்டுப்பதிவு!

 எந்த ஒரு பெண்ணாவது

எந்த ஒரு பெண்ணாவது

இமாம் ஷபீர் அகமது சித்திக் கூறுகையில், ''இஸ்லாம் மதத்தை பற்றி நாம் பேசினால், இந்த மதத்தில் தொழுகையை விட முக்கியமானது எதுவும் கிடையாது. எந்த ஒரு பெண்ணாவது தொழுகை செய்து நீங்கள் பார்த்து இருக்கிறீர்களா? பெண்கள் அனைவரது முன்னாலும் வெளிவர இஸ்லாம் மதம் அனுமதித்தால், அவர்கள் இதை செய்வதற்கு யாரும் தடை போட முடியாது.

ஹிஜாப்பை நம்மால் பாதுகாக்க முடியாது

ஹிஜாப்பை நம்மால் பாதுகாக்க முடியாது

ஆனால், மசூதிகளுக்கு வருவதற்கும் தொழுகையில் ஈடுபடுவதற்கும் பெண்களுக்கு தடை உள்ளது. ஏனென்றால் இஸ்லாம் மதத்தில் பெண்களுக்கு என்று ஒரு குறிப்பிட்ட நிலை இருக்கிறது. ஆண்களே இல்லையா? ஏன் இஸ்லாம் பெண்களுக்கு போட்டியிட அனுமதி கொடுத்தீர்கள்.. பெண்களை போட்டியிட வைப்பது நமது மதத்தை பலவீனப்படுத்தும் நடவடிக்கையாகும். எப்படி பலவீனப்படுத்தும் என்றால்.. உங்கள் பெண்களை நீங்கள் எம்.எல்.ஏவாகவோ. கவுன்சிலர்களகாவோ ஆக்கும் பட்சத்தில் ஹிஜாப்பை நம்மால் பாதுகாக்க முடியாது.

இதன்காரணமாகவே நான் எதிர்க்கிறேன்

இதன்காரணமாகவே நான் எதிர்க்கிறேன்

தேர்தலில் போட்டியிட வேண்டும் என்றால் போட்டியிடும் நபர் கண்டிப்பாக வீடு வீடாக மக்களை சந்திக்க வேண்டும். இந்துக்கள் முஸ்லீம்கள் என அனைவரையும் சந்திக்க வேண்டும். இதன்காரணமாகவே நான் கடுமையாக எதிர்க்கிறேன். நீங்கள் ஆண்களுக்கு தேர்தலில் போட்டியிட சீட் கொடுக்கலாம்" என்றார்.

கடும் விவாதம்

கடும் விவாதம்

குஜராத்தில் திங்கள் கிழமை நடைபெறும் 2-ஆம் கட்ட சட்டமன்ற தேர்தலில் ஆளும் பாஜகவுக்கு எதிராக ஆம் ஆத்மி, காங்கிரஸ் கட்சிகள் வரிந்து கட்டிக் கொண்டு நிற்கின்றன. மும்முனை போட்டி நிலவும் குஜராத் மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை 6.4 கோடியாகும். இவர்களில் சுமார் 10 சதவீதம் பேர் இஸ்லமிய சமூகத்தை சேர்ந்த மக்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இஸ்லாமிய மதகுருவின் இந்த கருத்து கடும் விவாதத்தை அம்மாநிலத்தில் கிளப்புவதாக அமைந்து இருக்கிறது.

சரியான வயதில் திருமணம் செய்யாததால்

சரியான வயதில் திருமணம் செய்யாததால்

முன்னதாக நேற்று அசாம் மாநிலத்தை சேர்ந்த அனைத்திந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி தலைவர் பத்ரூதீன் அஜ்மல் வெளியிட்ட ஒரு கருத்தும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பத்ரூதின் அஜ்மல் கூறுகையில், இஸ்லாமியர்கள் இளம் வயதில் திருமணம் செய்து கொள்கின்றனர். இதனால், அவர்களால் அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்ள முடிகிறது. ஆனால், இந்துக்கள் சரியான வயதில் திருமணம் செய்யாததால் சட்டத்திற்கு புறம்பான தொடர்புகளை வைத்துக்கொள்கின்றனர்.

 வருத்தம் தெரிவிப்பதாக

வருத்தம் தெரிவிப்பதாக

40-வயதிற்கு பிறகு பெற்றோரின் அழுத்தம் காரணமாக திருமணம் செய்கின்றனர். வளமான நிலத்தில் விதைத்தால் மட்டுமே நல்ல விளைச்சல் கிடைக்கும். எனவே இந்துக்களும் இஸ்லாமியர்கள் பின்பற்றும் நடைமுறையை பின்பற்ற வேண்டும். அப்படி செய்தால் இந்து சமூகத்திலும் மக்கள் தொகை அதிகரிக்கும்" என்று பேசியிருந்தார். இவரது கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவிப்பதாக பத்ரூதின் அஜ்மல் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளிக்கு வைத்திருந்தார்.

English summary
An imam from Gujarat has said that allowing Muslim women to contest elections is against Islam and it is an act of weakening the religion.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X