பெண்களை ட்ராக்டர் ஏற்றிக் கொல்ல முயன்ற ரியல் எஸ்டேட் அதிபர் மனைவி.. பதற வைக்கும் வீடியோ
உத்தரபிரதேசம் : நில பிரச்சினையால் ஏற்பட்ட ஆத்திரத்தில் ரியல் எஸ்டேட் அதிபரின் மனைவி டிராக்டரை ஏற்றி பெண்களை கொல்ல முயன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் பிஜ்னோர் பகுதியில் கிறிஸ்தவ அமைப்பு ஒன்றுக்கு சொந்தமான நிலத்தை அப்பகுதியில் உள்ள பிரபல ரியல் எஸ்டேட் அதிபர் ஆக்கிரமித்து வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.
நிலத்தை மீட்க அந்த கிறிஸ்தவ அமைப்பைச் சேர்ந்த பெண்கள் அங்கு சென்றபோது ஆத்திரமடைந்த ரியல் எஸ்டேட் அதிபரின் மனைவி இடுப்பில் துப்பாக்கியை சொருகியபடி டிராக்டரை ஏற்றி அந்த பெண்களை கொல்ல முயன்றார்.

ட்ராக்டரில் சிக்கிய பெண்...
அப்போது ஒரு பெண் ட்ராக்டர் அடியில் சிக்கிக்கொண்டார். அதிர்ஷ்டவசமாக ட்ராக்டரின் பின் சக்கரம் அந்த பெண் மீது ஏறவில்லை.

பரபரப்பு சம்பவம்...
சினிமாவில் நிகழ்வது போன்ற இந்த சம்பவம் பல மணி நேரம் அப்பகுதியில் தொடர்ந்தும் போலீசார் யாரும் அங்கு வரவில்லை.

கலெக்டர் வீட்டுக்கு எதிரே...
இத்தனைக்கும் இந்த கொடூர தாக்குதல் நிகழ்ந்த இடத்திற்கு எதிரே மாவட்ட ஆட்சியரின் வீடு அமைந்துள்ளது. தகராறு ஏற்பட்டு நீண்ட நேரம் ஆன பிறகே போலீசார் அங்கு வந்தனர்.

பெண் ரவுடி...
அவர்கள் பெண் ரவுடி போல் நடந்து கொண்ட ரியல் எஸ்டேட் அதிபரின் மனைவியை வி.ஐ.பி. மரியாதையுடன் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இந்த காட்சி அப்பகுதி மக்களை அதிர்ச்சியடையச் செய்தது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications