For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சுகாதாரமற்ற கழிவறைகளால் மரணிக்கும் குழந்தைகள்!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

டெல்லி: திறந்தவெளி கழிப்பறைகளை பயன்படுத்துவதன் மூலமும், சுகாதாரமற்ற கழிவறைகளின் மூலம் தினசரி 2000 குழந்தைகள் மரணிக்கின்றனர் என சமீபத்திய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

உலக நாடுகளில் 2.5 பில்லியன் மக்கள் சுகாதாரத்தை பேணுவது இல்லை. 1.1 பில்லியன் மக்கள் திறந்தவெளி கழிப்பறைகளை பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் சுகாதாரம் பாதிக்கப்படுகிறது. ஆண்டுதோறும் 2 லட்சம் குழந்தைகளை நோய் தாக்குதல்களில் இருந்து பாதுகாக்க வேண்டி உள்ளது என்று சிங்கப்பூரில் நடைபெற்ற ஐக்கிய நாடு பிரதிநிதிகள் கூட்டத்தில் பேசிய ஐ.நா தூதர் மார்க் நியோ கூறியுள்ளார்.

இந்த கூட்டத்தில் உலக நாடுகளில் சுகாதாரத்தை பாதுகாக்கும் வகையில் நவம்பர் 19ம் தேதியை உலக கழிவறை தினமாக கடைபிடிக்க ஐக்கிய நாடுகள் அறிவிக்கப்பட்டது. விவாதத்தை தொடர்ந்து 193 உறுப்பினர்கள் இதற்கு ஆதரவு தெரிவித்தனர்.

61 சதவீதம் பேரிடம்

61 சதவீதம் பேரிடம்

இந்தியாவில் 61 சதவீதம் பேருக்கு கழிவறை வசதி இல்லை. தமிழகத்தை பொறுத்த வரையில் 57 சதவீதம் பேருக்கு இந்த வசதி இல்லை. `மை டாய்லட் கிளீனர்' நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

தாக்கும் கிருமிகள்

தாக்கும் கிருமிகள்

மேலும் நகர்ப்புறங்களில் 40 சதவீதம் மேற்கத்திய கழிவறைகள் பயன் படுத்தப்படுவதால் சுகாதாரம் நன்றாக காக்கப் படுகிறது. மீதமுள்ள கழிவறைகள் டாய்லட் கிளீனர் பயன்படுத்தப்படாததால் கிருமிகள் இருக்கும் பகுதியாக உள்ளது.

கிளீனர் விழிப்புணர்வு

கிளீனர் விழிப்புணர்வு

கிராமப்புறங்களில் 80 சதவீதம் கழிவறை களில் கிருமிகளை அழிக்கும் கிளீனர் பயன்படுத்தப்படுவதில்லை. அங்கு திறந்த வெளிகளை மக்கள் அதிகம் பயன்படுத்துவதால் அடிக்கடி தொற்று நோய்களில் சிக்கி அவதிப் படுகிறார்கள்

வெளிப்புறங்களில்

வெளிப்புறங்களில்

அனேக நாடுகளில் கி.பி.1800களுக்கு முன்னர் காட்டுப்புற அல்லது ஒதுக்குபுற இடங்களிலோ மனிதர் உடல் கழிவுகளை அகற்றினர். 1800 பின்னரே தற்கால முறை நடைமுறைக்கு வந்தது. தமிழர் வரலாற்றில் விஜயநகரப் பேரரசு காலத்தில் தான் கழிவறைகள் அதிக அளவில் கட்டப்பட்டன என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

நீர்நிலைகளில்

நீர்நிலைகளில்

கழிவுகளை அகற்ற வேண்டிய தேவை 1850 பின்னர் தெளிவாக உணரப்பட்டது. கழிவுகள் நீர்நிலைகளை களங்கப்படுத்தினால் அவற்றின் மூலம் நோய் கிருமிகள் பரவுவது தெரிய வந்தது. கழிவுகளில் நோய் ஆகியவற்றின் தொடர்புகள் நிரூபிக்கப்பட்ட பின், கழிவுகளை குடிநீர் நிலைகளில் இருந்து பிரிப்பது தேவையாயிற்று.

சுகாதாரமற்ற கழிவறைகள்

சுகாதாரமற்ற கழிவறைகள்

நம்நாட்டில் உள்ள கிராமப்புறங்களில் தொற்று நோய்கள் அதிக அளவில் பரவி விஷ காய்ச்சல் ஏற்படு வதற்கு காரணமாகி விடுகிறது. இந்தியா வில் அடிக்கடி தொற்று நோய்கள் பரவுவதற்கு சுகாதாரமற்ற கழிவறைகள் தான் காரணம். அவற்றை சீரமைத்தாலே அரசுக்கு பல கோடி மருத்துவ செலவு மிச்சப்படும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

சுத்தம் அவசியம்

சுத்தம் அவசியம்

கழிவறைகளை 3 நாட்களுக்கு ஒரு முறையாவது நன்றாக தேய்த்து கழுவி விட வேண்டும். டாய்லெட் க்ளீனர் கொண்டு கழிவறையை சுத்தம் செய்வது அவசியம். கழிவறைகளை எப்போதும் ஈரப்பதமாக இல்லாமல் பார்த்துக் கொள்வது அவசியம்.

உலகம் முழுவதும்

உலகம் முழுவதும்

உலகம் முழுவதும் தினசரி 2000 குழந்தைகள் டயாரியாவினால் மரணிக்கின்றனர் இதற்குக் காரணம் சுகாதாரமற்ற கழிவறைகளினால்தான் என்பது தெரியவந்துள்ளது.

மொபைல் போன் பேச

மொபைல் போன் பேச

கழிவறை பற்றிய ஆய்வில் சில சுவாரஸ்யமான தகவல்களும் தெரியவந்தன. அதாவது, கங்னம் ஸ்டைல் பாடகர் ‘சை' டாய்லெட்டில் அமர்ந்து போஸ் கொடுத்தது போன்று நிறைய பேர் மொபைல் போனில் போட்டோ எடுத்துக் கொள்கின்றனராம். அதேபோல மொபைல் போனில் சண்டை போட, சத்தம் போட்டு பேச டாய்லெட்டை பயன்படுத்துகின்றனராம்.

English summary
Each year, more than 800,000 children under 5 die from diarrhea, the U.N. said, many due to poor sanitation.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X