
தாலி கட்டின அடுத்த செகண்டே "முத்தம்".. திக்குமுக்காடிய மாப்பிள்ளை.. பக்கத்துலயே "அந்தம்மா".. ஓ காட்
ஜெய்ப்பூர்: இணையத்தில் ஒரு வீடியோ ஷேர் ஆகி கொண்டிருக்கிறது.. இந்த மணமக்களை பார்த்து அனைவரும் வாழ்த்துக்களை சொல்லி வருகிறார்கள்..
ஆணும், பெண்ணும் இணைந்து தங்களின் உறவை அதிகார பூர்வமாக தொடங்க கூடிய நிகழ்வு தான் திருமணம்... வாழ்வில் ஒருமுறை நிகழக்கூடியது என்பதால், எல்லோரின் வாழ்விலும் மறக்க முடியாத நிகழ்வாக எப்போதும் இருக்கும்.
இதற்காக, தங்கள் திருமணத்தை மறக்க முடியாத அளவுக்கு சிறப்பாக நடத்துபவர்கள் உண்டு.. அதில் பல நெகிழ்வுகள் கலந்திருக்கும்.. பல சமயம் சுவாரஸ்யங்கள் கலந்திருக்கும்.. சில சமயம் விநோதங்களும், கலந்திருக்கும்.
பாரதியின் திருமணத்தை நிறுத்திய கண்ணம்மா..காண்டான வெண்பா எடுத்த முடிவு.. சூப்பராக முடிச்சிட்டாங்க

மருதாணி
அதிலும், வடமாநிலங்களில் திருமண வைபவங்கள் அதிகமாக நடக்கும்.. 3 நாட்களுக்கு மெஹந்தி விழா, மாப்பிள்ளை ஊர்வலம் என விதவித சடங்குகள் நடத்தப்படுகின்றன.. இந்த திருமணங்களில் அவரவர் வழக்கப்படி விளையாட்டுகளும் நிறைந்திருக்கும்... இப்படித்தான் ஒரு கல்யாணத்தில், மணமக்கள் இருவரும் மாலை மாற்றி கொள்ளும் சடங்கு நடந்துள்ளது.. இந்த சடங்கின்போது அந்த கல்யாண பெண், மாப்பிள்ளைக்கு மாலையை அணிவிக்கிறார்... இதையடுத்து மணமகனிடம் இருந்து மாலையை பெற்று கொள்ள மணமகள் முற்படும்போது, திடீரென மணமகன் மாலையை அணிவிக்க மாட்டேன் என்கிறார்...

ஹேப்பி
இது புரியாமல் கல்யாண பெண் திருதிருவென விழித்தார்.. உடனே முத்தம் கொடுத்தால் மாலை அணிவிக்கிறேன் என்று கண்டிஷன் போட்டார் அந்த மாப்பிள்ளை.. இதைக் கேட்டு, அந்த மணப்பெண் வெட்கத்தில் தலை குனிய , அங்கிருக்கும் சொந்தபந்தங்கள் எல்லாம் ஆரவாரம் செய்ய, உடனே அந்த பெண்ணும் மணமகனின் கன்னத்தில் முத்தமிட்டார்.. அதற்கு பிறகுதான் மாப்பிள்ளை மாலையை பெற்றுக் கொண்டார்.. இதேபோல இன்னொரு நிகழ்வும் 2 மாதத்துக்கு முன்புதான் நடந்தது..

திடீர் முத்தம்
கேரளாவை சேர்ந்த கடற்படை அதிகாரி அவர்.. அவருடைய கல்யாணத்துக்கு யூனிபார்மில்தான் இருந்தார்.. கல்யாணம் முடியும்வரை அந்த யூனிபார்ம்தான்.. இவர் மட்டுமில்லை, இவருடன் வேலை பார்க்கும் சக கடற்படை நண்பர்களும், யூனிபார்மிலேயே வந்திருந்தனர். இந்த நண்பர்கள் எல்லாம் சேர்ந்து மணப்பெண்ணிடம், மாப்பிள்ளைக்கு முத்தம் தரும்படி, ஒரு விளையாட்டு போட்டி வைத்தார்கள்.. இந்த நிகழ்வு அப்போது இணையத்தில் சுவாரஸ்யமாக பொதுமக்களால் பேசப்பட்டது.

தாலி கட்டும்போது..
இப்போதும் ஒரு சம்பவம் நடந்துள்ளது.. ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த திருமணம்போல் தெரிகிறது.. மணமகன், மணப்பெண்ணுக்கு தாலி எடுத்து கட்டுகிறார்.. அப்போது, கல்யாண பெண்ணின் அம்மா, அருகிலேயே நின்று, மகளுக்கு தாலி கட்டும்போது உதவுகிறார்.. தாலி கட்டும்போது மணமக்கள் இருவரும் நெருக்கமாக உட்கார்ந்திருந்தனர்.. அப்போது, மணமகளுக்கு முத்தம் தர மணமகன் விரும்பி உள்ளார். ஆனால், அனைவரும் அங்கு சூழ்ந்திருந்ததால், வெட்கப்பட்டு அமைதியாகிவிட்டார்..

கிஸ் + ஆரவாரம்
இதை புரிந்து கொண்ட மணப்பெண், தாலி கட்டி முடித்த அடுத்த செகண்டே, மாப்பிள்ளையின் கன்னத்தில் முத்தம் தந்துவிட்டார்.. மாப்பிள்ளையே இதை எதிர்பார்க்கவில்லை.. அங்கிருந்தோர் அனைவருமே கைகளை தட்டி ஆரவாரம் செய்கிறார்கள்.. இந்த வீடியோதான் வைரலாகி கொண்டிருக்கிறது.. ஒருசிலர் இந்த வீடியோவை பார்த்துவிட்டு, இது இந்திய மரபுகளுக்கு எதிரானது என்றும், பெரியவர்கள், பண்டிதர்கள் முன்பாக, இப்படியெல்லாம் மண்டபத்தில் செய்யக்கூடாது என்றும் சொல்லி வருகின்றனர்.. ஆனால், பெரும்பாலானோர் இந்த தம்பதிக்கு வாழ்த்துக்களை சொல்லி வருகிறார்கள்.. ஆனால், இந்த கல்யாண பொண்ணுக்கு கொஞ்சம் தில்லுதான்..!!