For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அகிலேஷின் தலைவர் பதவி பறிப்பு- பதிலடியாக டம்மியான அமைச்சர் சிவ்பால் யாதவ்!

By Mathi
Google Oneindia Tamil News

லக்னோ: உத்தரப்பிரதேசத்தின் ஆளும் சமாஜ்வாடி கட்சியில் உட்கட்சி மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. அக்கட்சி தலைவராக அகிலேஷ் யாதவின் பதவி பறிக்கப்பட்டு அவரது சித்தப்பா சிவ்பால் யாதவிடம் ஒப்படைக்கப்பட்டது. இதற்கு பதிலடியாக முதல்வர் அகிலேஷ் யாதவ் அமைச்சரவையில் 2-வது இடத்தில் இருந்த சிவ்பால் டம்மியாக்கப்பட்டுள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் முலாயம்சிங் யாதவின் மகன் அகிலேஷ் யாதவ் தலைமையில் சமாஜ்வாடி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அமைச்சரவையில் முலாயம் சிங்கின் சகோதரர் சிவ்பால் யாதவுக்கு 2-வது இடம் அளிக்கப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேச சட்டசபைக்கு இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அகிலேஷ் யாதவுக்கும் அவரது சித்தப்பாவான சிவ்பாலுக்கும் இடையே மோதல் ஏற்ட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு முக்தார் அன்சாரி என்வரின் கட்சியை சமாஜ்வாடி கட்சியுடன் இணைக்க சிவ்பால் விரும்பினார். ஆனால் அதை அகிலேஷ் யாதவ் ஏற்க மறுத்து விட்டார்.

சிவ்பால் யாதவுக்கு மிரட்ட

சிவ்பால் யாதவுக்கு மிரட்ட

இதனால் அதிருப்தி அடைந்த சிவபால் கட்சியில் விலக முயன்றார். அவரை முலாயம்சிங் சமரசம் செய்தார். மேலும், சிவ்பால் யாதவ் மீது அதிகமான லஞ்ச புகார்கள் வருவதால் அவரை ராஜினாமா செய்யும்படி மிரட்டல் விடுக்கப்படுவதாகவும் தகவல் வெளியாகின.

புதிய தலைவராக சிவ்பால்

புதிய தலைவராக சிவ்பால்

இந்த நிலையில் நேற்று திடீரென சமாஜ்வாடி கட்சி தலைவர் பதவியில் இருந்து அகிலேஷ் யாதவை முலாயம் நீக்கினார். அத்துடன் கட்சித் தலைவராக தனது தம்பி சிவ்பாலை நியமனம் செய்து அறிவித்தார்.

சிவ்பால் இலாக்காக்கள் பறிப்பு

சிவ்பால் இலாக்காக்கள் பறிப்பு

இது அகிலேஷிடம் கடும் அதிர்ச்சியை ஏற்டுத்தியது. இதையடுத்து அகிலேஷ் பதிலடி நடவடிக்கைகளில் ஈடுபட்டார். அமைச்சரவையில் சிவ்பால் பொதுப்பணித் துறை, நீர்ப் பாசனம், வருவாய், மற்றும் கூட்டுறவுத் துறை ஆகியவற்றை வகித்து வந்தார். இந்த இலாக்காக்களை அகிலேஷ் பறித்தார். அதற்கு பதில் முக்கியத்துவம் இல்லாத சமூக நலத்துறையை கொடுத்துள்ளார். அகிலேசின் இந்த அதிரடி நடவடிக்கை முலாயம்சிங், சிவ்பால் இருவருக்கும் கடும் அதிர்ச்சி அளித்துள்ளது.

உச்சகட்ட மோதல்

உச்சகட்ட மோதல்

முன்னதாக சிவ்பாலுக்கு ஆதரவாக இருந்த உத்தரபிரதேச மாநில அரசின் தலைமை செயலாளர் தீபக் சிங்காலையும் அகிலேஷ் நீக்கினார். அகிலேஷின்ன் இந்த அதிரடிகளால் சமாஜ்வாடி கட்சியில் உச்ச கட்ட மோதல் ஏற்ட்டுள்ளது.

English summary
Uttar Pradesh Chief Minister Akhilesh Yadav stripped his uncle and powerful cabinet minister Shivpal Yadav of all important portfolios late on Tuesday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X