கர்நாடக பாஜக சட்டமன்ற குழு தலைவராக தேர்வு செய்யப்படுகிறார் எடியூரப்பா!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரிய எடியூரப்பா- வீடியோ

  பெங்களூரு: கர்நாடக பாஜக சட்டமன்ற குழு தலைவராக அக்கட்சியின் முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா இன்று தேர்வு செய்யப்படவுள்ளார்.

  கர்நாடகாவில் மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 222 தொகுதிகளுக்கு கடந்த 12ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் 72 புள்ளி ஒன்று மூன்று சதவிகித வாக்குகள் பதிவான நிலையில், அவற்றை எண்ணும் பணி நேற்று நடைபெற்றது.

  Yeddyurappa to be elected as BJP assembly leader today

  இதில், பாஜக 104 இடங்களை கைப்பற்றி, தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. காங்கிரஸ் கட்சி 78 இடங்களிலும், மதசார்பற்ற ஜனதா தளம் 38 இடங்களிலும் வெற்றிபெற்றுள்ளன.

  பிற கட்சிகள் மூன்று இடங்களில் வெற்றிப்பெற்றுள்ளன. கர்நாகாவில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடித்து வருகிறது.

  இந்நிலையில் இன்று காலை கர்நாடக பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறுகிறது. இதில் பாஜக முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா கர்நாடக பாஜக சட்டமன்ற குழு தலைவராக தேர்வு செய்யப்படவுள்ளார்.

  பாஜக சார்பில் முதல்வர் வேட்பாளராக ஷிகாரிபுரா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் எடியூரப்பா.

  வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Yeddyurappa to be elected as BJP assembly leader today. Karnataka BJP conducts MLAs meet in Karnataka today.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற