திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயிலில் வழிபாடு நடத்த அனுமதி கோரி கே.ஜே.யேசுதாஸ் கடிதம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயிலில் வழிபாடு நடத்த அனுமதி கோரி பாடகர் கே.ஜே. யேசுதாஸ் கோயில் நிர்வாகத்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.

யேசுதாஸின் சினிமா பாடல்களை காட்டிலும் சபரிமலை ஐயப்பன் சன்னதியில் அவர் பாடிய ஹரிவராசனம் பாடல் இன்றும் சுவாமிக்கு தாலாட்டு பாடுவது போன்ற ஒரு உணர்வை ஏற்படுத்தும். இவர் பத்மநாப சுவாமி கோயிலில் வரும் செப் 30- ஆம் தேதி விஜயதசமி அன்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதி கோரி கோயில் நிர்வாகத்துக்கு யேசுதாஸ் கடிதம் எழுதியுள்ளார்.

Yesudas applies for permission to pray at Padmanabha Swamy temple

வேற்று மதத்தினருக்கு சில கோயில்களில் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை என்பதால் யேசுதாஸ் கோயில் நிர்வாகத்துக்கு கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து கோயில் நிர்வாகம்தான் இறுதி முடிவை எடுக்கும்.

இந்த கோயிலை பொருத்தமட்டில் ஹிந்து மதத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் யார் வேண்டுமானாலும் சுவாமி தரிசனம் செய்யலாம் என்பதாகும். திருச்சூர் மாவட்டம் குருவாயூர் கோயிலில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணனுக்காக யேசுதாஸ் ஏராளமான பாடல்களை பாடியிருந்தாலும் அவர் இதுவரை குருவாயூரப்பனை தரிசனம் செய்ததில்லை. அதற்கு காரணம் வேற்று மதத்தினருக்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

யேசுதாஸ் கலையுலகிற்கு வந்து 56-ஆவது ஆண்டை முன்னிட்டு 14 மொழிகளில் லட்சத்துக்குமான பாடல்களை பாடியுள்ளார். 1975-ஆம் ஆண்டு பத்ம ஸ்ரீ விருதும், 2002-இல் பத்மபூஷன் விருதும், 2017-இல் பத்மவிபூஷன் விருதும் யேசுதாஸுக்கு வழங்கப்பட்டன.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Legendary playback singer K.J. Yesudas has applied for a permission to pray at the famed Sree Padmanabha Swamy temple here on the occasion of Vijayadeshmi.
Please Wait while comments are loading...