கன்னடம் பேசுங்க பார்ப்போம்.. இந்தி பேச சொன்ன கும்பலிடம் கெத்து காட்டிய "சிங்கப்பெண்!" தெறி வீடியோ
பானஜி: கோவாவில் படகு சவாரி செய்தவர்களிடம் இந்தியில் பேச ஒரு கும்பல் வலியுறுத்திய நிலையில் பெண் ஒருவர், ‛‛நீங்கள் கன்னட மொழியில பேசுங்க'' என கன்னட மொழியில் ஆக்ரோஷமாக கூறிய வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
இந்தியாவில் சமீப காலமாக தேசிய மொழி என்பது இந்தி என்ற பிரசாரம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு இந்தி பேசாத மாநிலங்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
குறிப்பாக தமிழகமும், கர்நாடகமும் முன்னிலையில் உள்ளது. மத்திய அரசாக இருந்தாலும் சரி யாராக இருந்தாலும் சரி இந்தி தேசியமொழி என்றால் அவர்கள் தொடர் விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர்.

அமித்ஷா, அஜய் தேவ்கன்
இந்நிலையில் தான் இந்த மாத துவக்கத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற அலுவல் மொழி ஆணைய கூட்டத்தல், ‛‛இந்தியாவில் ஆங்கிலத்துக்கு மாற்றாக இந்தி மொழியை மக்கள் ஏற்க வேண்டும்'' என்றார். இதற்கு கடும் விமர்சனங்கள் எழுந்தன. இதன் தொடர்ச்சியாக இந்தி தேசியமொழி இல்லை என கன்னட நடிகர் கிச்சா சுதீப் தெரிவித்ததை குறிப்பிட்டு பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் இந்தி மொழியில், ‛சகோதரர் கிச்சா சுதீப், இந்தி நமது தேசிய மொழி இல்லையென்றால் நீங்கள் ஏன் உங்கள் தாய்மொழி படங்களை இங்கு டப் செய்து வெளியிடுகிறீர்கள்?. இந்தி முன்பும் இப்போதும் எப்போதும் நமது தாய்மொழியாக, தேசிய மொழியாக இருக்கும்'' என்றார்.

சுதீப் பதிலடி
இதற்கு கிச்சா சுதீப், "சார் எனது பேச்சின் பொருள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது என நினைக்கிறேன். இதுபற்றி நேரில் சந்திக்கும் போது உங்களுக்கு விளக்குகிறேன். யாரையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கு கிடையாது. நீங்கள் இந்தியில் அனுப்பியது எனக்கு புரிந்தது. ஏனெனில் நாங்கள் நேசித்து இந்தியை கற்றுக்கொண்டிருக்கிறோம். ஆனால் என்னுடைய இந்த பதிலை ஒருவேளை நான் எனது தாய்மொழியான கன்னடத்தில் பதிவிட்டு இருந்தால் நிலைமை என்னவாக இருக்கும். அது உங்களால் எப்படி புரிந்து கொள்ள முடியும். நாங்களும் இந்தியாவில்தானே இருக்கிறோம் சார்?" என்று தெரிவித்தார்.

கர்நாடகத்தில் எதிர்ப்பு
இதனால் மீண்டும் இந்தி மொழி தொடர்பான பிரச்சனை விவாதப்பொருளானது. தொடர்ச்சியாக நடிகர் அஜய் தேவ்கனை தமிழகம், கன்னட மக்கள், அரசியல்வாதிகள், நடிகர், நடிகைகள் விமர்சனம் செய்து வருகின்றனர். குறிப்பாக கர்நாடக முன்னாள் முதல்வர்கள் சித்தாராமையா, குமாரசாமி ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். தற்போதைய பாஜக முதல்வர் பசவராஜ் பொம்மையும் சுதீப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். மேலும் அஜய் தேவ்கனுக்கு எதிராக கன்னட அமைப்பினர் போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர். மேலும் அஜய் தேவ்கன் படத்தை கர்நாடகத்தில் வெளியிடக்கூடாது என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

கோவா படகு சவாரி வீடியோ
இந்நிலையில் தான் தற்போது இணையதளத்தில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. 30 செகன்ட் உள்ள அந்த வீடியோ கோவாவில் எடுக்கப்பட்டுள்ளது. சுற்றுலா தலமான கோவாவில் 2 படகுகளில் ஏராளமானவர்கள் படகு சவாரி செய்கின்றனர். அதில், ஒருபடகில் இருக்கும் பெண்கள் ஆங்கிலம், கன்னட மொழிகளில் பேசுகின்றனர்.

இந்தி பேச வலியுறுத்தல்
இதற்கு இன்னொரு படகில் உள்ள கும்பல் எதிர்ப்பு தெரிவிக்கிறது. மேலும் இந்த கும்பல் கூச்சலிட்டபடி, ‛‛இந்தியில் பேச வேண்டும்'' என மற்றொரு படகில் இருக்கும் பெண்களிடம் கூறுகிறது. இதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் பெண்கள் யாரும் பதிலளிக்காமல் தங்களது பணியை செய்கின்றனர்.

கன்னடத்துல பேசுங்க
இருப்பினும் அந்த கும்பல் விடுவதாக இல்லை. ஆக்ரோஷமடைந்த பெண் ஒருவர், ‛‛ ‛நீங்கள் கன்னடத்துல பேசுங்க... நீங்க கன்னடத்துல பேசுங்க பார்ப்போம்'' என கூற அந்த கும்பல் கத்த துவங்கியது. அப்போது ‛இது இந்தியா இந்தியில் தான் பேச வேண்டும்'' என கும்பல் கூச்சலிடுகிறது. இதை அந்த பெண் கண்டு கொள்ளாமல் கெத்து காட்டியுனார்.

வீடியோ வைரல்
தற்போது இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்து வருகின்றனர். மொழி என்பது மாநிலங்களுக்கு மாநிலம் மாறுபடுகிறது. அதோடு ஒவ்வொருவருக்கும் தங்களது தாய் மொழியில் பேச உரிமை உள்ளது. இதற்கு பொது வெளியில் எதிர்ப்பு தெரிவித்து இந்தியில் பேசக்கூறுவது என்பது மோசமான செயல். இது அநாகரீகமானது என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications