2வது முறை "உறவு"க்கு மறுப்பு.. அதுக்குன்னு இப்படியா.. ஸ்ட்ரைட்டா போலீசுக்கே போயிட்டாரு கணவர்.. ஹய்யோ
மனைவியை கொன்று பிளாஸ்டிக் பையில் சடலத்தை போட்டு சாலையில் வீசியுள்ளார் கணவர்
கான்பூர்: இப்போதெல்லாம் கொலைகளை செய்தால், சடலத்தை கொலையாளிகளே துண்டாக வெட்டி, ஒரு பிளாஸ்டிக் கவரை எடுத்து, அதற்குள் திணித்து பேக் செய்து வைத்துவிட்டு போய்விடுகிறார்கள்.. இந்த டிரெண்டுதான் வடமாநிலங்களில் ஓடிக் கொண்டிருக்கிறது.
டெல்லி ஷ்ரத்தா கொலையின் முழு விவரமே இன்னும் வெளியே வரவில்லை.. 35 துண்டுகளில் நிறைய துண்டுகளை போலீசார் மீட்காமல் உள்ளனர்.. அந்த சம்பவம் நடந்த 4வது நாளில் பங்களாதேஷில் ஒரு கொலை நடந்தது.
அபுபக்கர் என்ற இளைஞரும், ஒரு பெண்ணுடன் லிவிங் டூ கெதரில் வாழ்ந்து வருகிறார்.. ஆனாலும் கவிதா ராணி என்ற இந்து பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.. அறிமுகமாகி 5 வது நாளே, யாருமில்லாத சமயம் தன் வீட்டிற்கு அந்த பெண்ணை அழைத்து சென்றுள்ளார்..

சூட்கேஸ்
வீட்டிற்குள் நுழைந்தபிறகுதான், ஏற்கனவே ஒரு பெண்ணுடன் குடும்பம் நடத்தி கொண்டிருக்கிறார் என்பது கவிதா ராணிக்கு தெரியவந்துள்ளது.. இது வாக்குவாதமாகிவிட்டது.. உடனே அந்த ரூமுக்குள்ளேயே, கத்தியை எடுத்து வந்து கவிதா ராணியின் தலையை வெட்டினார் அபுபக்கர்.. விரல்களை தனியாக வெட்டினார். உடலை தனியாக எடுத்து ஒரு சூட்கேஸில் வைத்தார்.. பக்கத்திலேயே ஒரு பிளாஸ்டிக் கவரில் தலையை வைத்துவிட்டு, தப்பித்து ஓடினார்.. இந்த சம்பவ அதிர்ச்சி முடிவதற்குள் இன்னொரு சம்பவம் நடந்து விசாரணை நடந்து கொண்டிருக்கும்போதே, இன்னொரு கொலை டெல்லியில் நடந்தது.

உடலுறவு
பூனம் என்ற பெண், தன்னுடைய கணவர் அஞ்சான் தாஸை கொலை செய்தார்.. தன்னுடைய மருமகளை இந்த அஞ்சான்தாஸ் தப்பாக பார்த்தாராம்.. தவறாகவும் நடந்து கொள்ள முயன்றாராம்.. அதனால், கணவருக்கு மதுவில் தூக்க மாத்திரை கலந்து தந்து, மகனுடன் சேர்ந்து கத்தியால் கழுத்தை அறுத்து கொன்றுள்ளார்.. அந்த உடலில் இருந்து ரத்தம் முழுவதும் வடியும் வரை ஒருநாள் முழுக்க காத்திருந்து, அதற்கு பிறகு, 10 துண்டுகளாக உடலை வெட்டி, பிரிட்ஜில் வைத்துள்ளனர். இது தொடர்பான விசாரணையும் நடந்து கொண்டிருக்கிறது.

உல்லாசம்
இதோ இன்னொரு கொலை உத்தரபிரதேச மாநிலம் அம்ரொஹா மாவட்டத்தில் நடந்துள்ளது.. இங்கு வசித்து வருபவர் முகமது அன்வர்.. 34 வயதாகிறது.. மனைவி பெயர் ருக்ஷர்.. 30 வயதாகிறது.. கடந்த 2013-ல் இவர்களுக்கு திருமணமாகி உள்ளது.. 3 குழந்தைகளும் இருக்கிறார்கள்.. இந்நிலையில், அன்வர் தன்னுடைய மனைவியுடன் இரவு உல்லாசமாக இருந்துள்ளார்... பிறகு தூங்கிவிட்டார்.. சிறிது நேரம் கழித்து மீண்டும் உடலுறவுக்கு வருமாறு அழைத்துள்ளார். ஆனால், மனைவி ருக்ஷர் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

கயிறு கட்டி
இதனால், உச்சக்கட்ட கோபம் அடைந்த அன்வர், மனைவியின் கழுத்தை நெறித்து துடிதுடிக்க கொன்றுவிட்டார். பிறகு, ஒரு பெரிய பிளாஸ்டிக் கவரை எடுத்து, அதற்குள் சடலத்தை திணித்து, கயிறு கட்டி பேக்கிங் செய்தார்.. அந்த பேக்கிங்கை எடுத்துக் கொண்டு வந்து, ரோட்டோரத்தில் வைத்துவிட்டு, நேராக போலீஸ் ஸ்டேஷன் போனார்.. மனைவியை காணவில்லை, கண்டுபிடித்து தருமாறு ஒப்பாரி வைத்தார்.. போலீசாரும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியபோதுதான், ரதுபுரா என்ற கிராமத்தில் அடையாளம் தெரியாத பெண் சடலம் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

ஜாலி உல்லாசம்
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தியபோதுதான், உயிரிழந்தது ருக்ஷர் என்பது தெரியவந்தது.. உடனே அன்வரை பிடித்து தங்கள் பாணி விசாரணையை நடத்தியபோதுதான், ஒரே இரவில் 2 முறை உல்லாசத்துக்கு அழைத்ததாகவும், அவர் வர மறுத்ததால் ருக்ஷரை கழுத்தை நெரித்து கொன்றதாகவும் வாக்குமூலம் தந்துள்ளார்.. இந்த கொலைக்கு அன்வரின் தம்பியும் உடந்தையாக இருக்கிறார்.. இப்போது 2 பேருமே ஜெயிலில் உள்ளனர்.. வடமாநில மக்களால் ஒரு உயிரை, எப்படி இப்படியெல்லாம் சர்வசாதாரணமாய்???












Click it and Unblock the Notifications