காஷ்மீரில் மனிதகேடயமாக வாலிபரை ஜீப்பில் கட்டிய ராணுவ வீரர்கள்: வைரலான வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் ராணுவ ஜீப்பில் வாலிபர் ஒருவர் மனித கேடயம் போன்று கட்டப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ஸ்ரீநகர் தொகுதிக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை இடைத்தேர்தல் நடந்தது. வாக்குப்பதிவு தினத்தன்று பத்காம் மாவட்டத்தில் உள்ள பீர்வான் பகுதியில் வாலிபர்கள் பாதுகாப்பு படை வீரர்கள் மீது கல்வீச்சில் ஈடுபட்டனர்.

Youth tied to an army jeep in Jammu and Kashmir

இதையடுத்து பாதுகாப்பு படை வீரர்கள் கல்வீச்சில் ஈடுபட்டவர்களில் ஒரு வாலிபரை பிடித்து தங்கள் ஜீப்பின் முன்பகுதியில் கட்டி அவரை மனித கேடயமாக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

வாலிபர் ஜீப்பில் கட்டப்பட்டபோது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாலிபரை ஜீப்பில் கட்டியது 53 ராஷ்ட்ரிய ரைஃபில் படை வீரர்கள் என்பது தெரிய வந்துள்ளது.

ஜீப்பில் கட்டப்பட்ட வாலிபர் பத்காம் மாவட்டத்தில் உள்ள சிதாஹரன் கிராமத்தை சேர்ந்த ஃபரூக் தார் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து ராணுவ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வாலிபர் ஜீப்பில் கட்டப்பட்ட வீடியோவை ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Video of a youth tied to an army jeep in Jammu and Kashmir has forced the authorities to investigate the matter.
Please Wait while comments are loading...