For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இமயமலையை குடைந்து.. லடாக் - காஷ்மீர் இடையே பெரிய சுரங்கம் அமைக்கும் இந்தியா.. அசர வைக்கும் பிளான்!

Google Oneindia Tamil News

லடாக்: காஷ்மீர் மற்றும் லடாக்கை இணைக்கும் வகையில் பூமிக்கு அடியில் மிகப்பெரிய சுரங்க பாதையை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. பல்வேறு திட்டங்களை கருத்தில் கொண்டு இந்த சுரங்கத்தை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.

ஜம்மு காஷ்மீரிலும் லடாக்கில் தொடர்ந்து பாதுகாப்பு தொடர்பான பிரச்சனைகள் இருந்து வருகிறது. காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தி அத்துமீறி வருகிறது. லடாக்கில் சீனா தொல்லை கொடுத்து வருகிறது.

நிலைமை இப்படி இருக்க வரும் நவம்பர் டிசம்பர் மாதங்களில் பனிப்பொழிவு காரணமாக இங்கு இருக்கும் சாலைகள் பயன்படுத்த முடியாத நிலையை அடையும். மொத்தமாக மக்கள் போக்குவரத்து, ராணுவ போக்குவரத்தும் முடங்கும் நிலை ஏற்படும்.

திமுக சகோதரர்களால் வேட்டையாடப்பட்ட சசிகலா.. சிபிஐ விசாரணை கேட்கும் தாயார்.. கோர்ட்டில் அதிரடி வழக்குதிமுக சகோதரர்களால் வேட்டையாடப்பட்ட சசிகலா.. சிபிஐ விசாரணை கேட்கும் தாயார்.. கோர்ட்டில் அதிரடி வழக்கு

லடாக் முடங்கும்

லடாக் முடங்கும்

அதேபோல் லடாக் மற்றும் காஷ்மீர் இரண்டும் மொத்தமாக பனிப்பொழிவு மற்றும் மலை சரிவு காரணமாக துண்டிக்கப்படும் நிலைமை ஏற்படும். இந்த நிலையில் இதை தடுக்க மத்திய அரசு 2013ல் அறிவித்த திட்டம் லடாக் மற்றும் காஷ்மீர் இடையிலான சுரங்க பாதை திட்டம். ஸீ மார்ப் (Z-Morh) மற்றும் சோஜி லா சுரங்கம் (Zoji La tunnel) என்ற இரண்டு திட்டங்கள் கொண்டு வரப்பட்டது.

வேகம் எடுத்துள்ளது

வேகம் எடுத்துள்ளது

மிகவும் மெதுவாக நடந்து வந்த இந்த திட்டம் தற்போது வேகம் எடுத்துள்ளது. ஸீ மார்ப் (Z-Morh) மற்றும் சோஜி லா சுரங்கம் (Zoji La tunnel) இரண்டும் இந்தியாவை மலைக்க வைக்க போகும் பிளான் என்று கூறுகிறார்கள்.இதற்காக இமயமலை மலை பகுதியில் குறிப்பிட்ட இடத்தில் சுரங்கம் தோண்ட இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் ஸீ மார்ப் (Z-Morh) 6.5 கிமீ பகுதிக்கும் சோஜி லா சுரங்கம் (Zoji La tunnel) மொத்தம் 8 கிமீ பகுதிக்கும் அமைக்கப்பட உள்ளது.

ஏன் இப்படி

ஏன் இப்படி

பனிபொழிவின் போது லடாக் மற்றும் காஷ்மீர் இடையே தொடர்பு துண்டிக்கப்படும். இதை தடுக்கும் பொருட்டு மலை மற்றும் பூமிக்கு உள்ளே சுரங்கம் அமைத்து சாலை அமைக்க உள்ளனர். ஸ்ரீநகர் மற்றும் கார்கில் பகுதிகளை இணைக்கும் வகையில் இந்த ஸீ மார்ப் (Z-Morh) மற்றும் சோஜி லா சுரங்கம் (Zoji La tunnel) உருவாக்கப்பட வுள்ளது. இதற்கான பணிகள் தற்போது துரிதமாக நடந்து வருகிறது .

தற்போது மூடப்பட்டுள்ளது

தற்போது மூடப்பட்டுள்ளது

தற்போது ஸ்ரீநகர் கார்கில் இடையிலான சாலை பாதை பனி பொழிவு காரணமாக மூடப்பட்டுள்ளது. ஒரு வருடத்தில் 7 மாதங்கள் இந்த சாலை மூடப்பட்டு இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டத்தின் படி மொத்தம் இரன்டு சுரங்க பாதைகள் அமைக்கப்படும். 6.5 கிலோ மீட்டருக்கும், 8 கிலோ மீட்டருக்கும் சுரங்க பாதைகள் அமைக்கப்படும். இந்த சுரங்க பாதைகளை அமைக்க 2379 கோடி ரூபாய் செலவு செய்யப்படும்.

மலையை குடைந்து

மலையை குடைந்து

இமயமலை பகுதியை குடைந்து,அதேபோல் அருகில் இருக்கும் சிறு சிறு குன்றுகளை குடைந்து இந்த பாலம் அமைக்கப்படும். மேலும் 30 கிமீ சாலை, நான்கு பாலங்கள், ஒரு சிறிய பாலமும் இந்த திட்டத்தின் கீழ் கட்டப்படும். அதேபோல் பனிப்பொழிவை தடுக்கும் வகையில் சாலை ஓரம் பெரிய அணை போன்ற தடுப்புகள் அமைக்கப்படும். மொத்தம் 18 தடுப்புகள் இப்படி அமைக்கப்பட உள்ளது.

எவ்வள்வு ஆகும்

எவ்வள்வு ஆகும்

இது அனைத்தையும் சேர்த்து மொத்தம் 4430 கோடி ரூபாய் செலவு செய்யப்படும். சுரங்கம் அமைக்கும் பணிகள் 2021ல் முடியும். அதேபோல் மொத்த திட்டம் 2026ல் முடியும். இந்த திட்டம் முடியும் வரை மலை பகுதியில் பயன்படுத்தப்படும் சாலை புதுப்பிக்கப்படும். இந்த புதுப்பிக்கப்பட்ட காஷ்மீர் - லடாக் சாலை அடுத்த மாதம் திறக்க உள்ளது. இது பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

செம பிளான்

செம பிளான்

பாதுகாப்பு ரீதியாகவும் இந்த திட்டம் பெரிய பலன் அளிக்கும் என்கிறார்கள். இங்கு சாலைகள் மூடப்படுவதால், எல்லையில் வீரர்களை இடமாற்றம் செய்வது கஷ்டமான விஷயமாக மாறியுள்ளது. ஆனால் இந்த சுரங்கம் அமைக்கப்பட்டால் மிக எளிதாக எல்லையில் வீரர்களை இடமாற்றம் செய்யலாம். அதேபோல் மக்களும் இந்த சுரங்கத்திற்கு இடையே எளிதாக போக்குவரத்து பணிகளை மேற்கொள்ள முடியும்.

English summary
Z-Morh Tunnel and Zoji-La tunnel may come true soon in Kashmir to Ladakh travel.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X