2028 பருவநிலை மாநாடு இந்தியாவில் நடத்த வேண்டும்! சர்வதேச தலைவர்கள் முன் அழுத்தமாக பேசிய பிரதமர் மோடி
துபாய்: அமீரகத்தில் நடந்த உலக பருவநிலை உச்சி மாநாட்டில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, "வரும் 2028- ஆம் ஆண்டில் நடக்க இருக்கும் காப்-33 உலக பருவநிலை உச்சி மாநாட்டை இந்தியாவில் நடத்த வேண்டும் என்று கூறினார்.
உலகம் இன்று எதிர்கொள்ளும் மிகப்பெரும் பிரச்சினை காலநிலை மாற்றம்தான். உலகம் முழுவதும் பருவம் தவறிய மழை, மழை வெள்ளம் உள்ளிட்டவற்றால் பல நாடுகள் பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. பருவநிலை மாறுபாடுக்கு முக்கிய காரணம் என்பது பூமி வெப்பமடைவது தான். புவி வெப்பமடைவதை தடுக்க அனைத்து நாடுகள் தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுப்பப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், பூமி வெப்பமயமாதல், காலநிலை மாற்ற பிரச்சனைகளை சரிசெய்ய பல உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் உச்சி மாநாடு ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது. ஆண்டுதோறும் ஐ.நா.வின் சார்பில் உச்சி மாநாடு உறுப்பு நாடுகளில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் துபாய் எக்ஸ்போ நகர வளாகத்தில் காப்-28 உலக பருவநிலை உச்சி மாநாடு தொடங்கியது.
இந்த மாநாட்டை அமீரக அமைச்சரும் காப்-28 மாநாட்டின் தலைவருமான சுல்தான் ஜாபர் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். ஐ.நா. உச்சி மாநாட்டு வளாகத்தின் நீல மண்டலத்தில் பல்வேறு நாடுகளின் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடியும் துபாய் சென்றார். உலக பருவநிலை உச்சி மாநாட்டின் இரண்டாவது நாளான நேற்று கருத்தரங்கில் பிரதமர் மோடி உரையாற்றினார்.
அப்போது பிரதமர் மோடி கூறியதாவது:- இந்தியா உலக அளவில் 4 % குறைவான அளவே கார்பன் உமிழ்தலில் பங்கு வகிக்கிறது. உலக நலனுக்காக அனைவரது நலன்களையும் பாதுகாப்பது அவசியம். உறுதியளிக்கப்பட்ட காலக்கெடுவுக்கு 11 ஆண்டுகளுக்கு முன்பாகவே இலக்குகளை எட்டியுள்ளது.
வரும் 2030-ம் ஆண்டுக்குள் மாசு உமிழ்வை 45 சதவீதம் குறைக்கவும், புதைபடிவமற்ற (பெட்ரோலிய எரிபொருள் அல்லாத) எரிபொருட்களின் பங்கை 50 சதவீதம் அதிகரிக்கவும் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த நூற்றாண்டின் தவறுகளை சரி செய்ய நமக்கு அதிக நேரம் இல்லை. வரும் 2028-ம் ஆண்டில் நடக்க இருக்கும் காப்-33 உலக பருவநிலை உச்சி மாநாட்டை இந்தியா ஏற்று நடத்த விரும்புகிறோம்" என்றார்.
-
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications