For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அமேசான் காட்டுப் பகுதியில் விழுந்து நொறுங்கிய ராணுவ விமானம்: 22 வீரர்கள் பலி

By Karthikeyan
Google Oneindia Tamil News

பெரு: ஈகுவேடர் நாட்டில் ராணுவ விமானம் ஒன்று அமேசான் காட்டுப் பகுதியில் பறந்து கொண்டிருந்த போது கீழே விழுந்து நொருங்கி விபத்துக்குள்ளானதில் 22 வீரர்கள் பரிதாபமாக பலியாகினர்.

ஈகுவேடர் நாட்டில் ராணுவ விமானம் ஒன்று பெரு எல்லையில் உள்ள பாஸ்டாஷா மாகாணத்தில் இருந்து புறப்பட்டது. இந்த விமானம் அமேசான் காட்டு பகுதியின் மீது பறந்த கொண்டிருந்த போது திடீரென அந்த பகுதியில் மோசமான வானிலை நிலவியுள்ளது.

22 killed in Ecuador military plane crash

இதையடுத்து விமான கட்டுப்பாட்டு அறைக்கு விமானி தகவல் தெரிவித்துள்ளார். தகவல் தெரிவித்த சில நிமிடங்களிலே அந்த விமானம் நிலைதடுமாறி திடீரென கீழே விழுந்து நொறுங்கியது.

இந்த விபத்தில் விமானம் பலத்த சேதமடைந்தது. அதில் பயணம் செய்த ஒருவர் கூட உயிர் பிழைக்கவில்லை. 22 பேரும் பலியாகினர். இந்த தகவலை ஈகுவேடர் அதிபர் ரபேல் கோரியா டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

விமானத்தில் 19 ராணுவ வீரர்கள், 2 விமானிகள், ஒரு மெக்கானிக் பயணம் செய்தனர். பாராசூட்டில் இருந்து குதித்து பயிற்சி பெறுவதற்காக அவர்கள் விமானத்தில் சென்றனர். விபத்துக்கான காரணம் குறித்து தெரியவில்லை. அது பற்றி விசாரணை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

English summary
A military aircraft crashed in the Ecuadorian province of Pastaza, killing all 22 people on board, officials said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X